பக்கம்:நம் நேரு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

89


அறிந்து மகிழ்ந்து போளுர் நேரு அவ் வருஷம் சுபாஷ் போஸ் தான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவ் விஷயம், ஜான்கந்தர் தனது இன்ஸைட் ஏஷியா எனும் நூலில் அம்பலப்படுத்துகிற வரையில் ரகசிய மாகவே கின்று விட்டது.

நேரு அடிக்கடி அயல் நாடுகளுக்குப் போய்வந்து கொண்டு தானிருந்தார். ஐரோப்பாவில் புகைந்து வந்த யுத்த எரிமலை ஹிட்லரின் தயவால் அக்னி கக்கி உலக மகாயுத்தமாக மாறியது. வருஷக்கணக்கிலே வளர்ந்தது.

இந்தியாவில் காங்கிரஸ் மந்திரிசபைகள் ராஜிநாமா செய்தன. கால ஓட்டத்தோடு போட்டியிட்டுத் தீவிர சம்பவங்கள் நிகழலாயின. காலப்பாழிலே சரித்திரம் சார மற்று வறண்டுபோவதை உணர்ந்த காந்திஜீ வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டு, சுதந்திரப் போருக்குக் கொடியேற்றி வைத்தார். நாடு முழுவதும் கொந்தளித்து எழுந்தது, காந்தியும் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். பிறகு நடந்தவை எல்லாம் நாட்டினரின் நினைவில் பசுமையாய் நிற்பவை தான் . தலைவர்கள் விடுதலை, பிரிட்டஷாரின் புதியதிட்டம், முஸ்லிம் லீகின் முரட்டுப் பிடிவாதம், நாடு துண்டாடப் பட்ட கதை, பிரிட்டிஷார் ஆட்சிப் பொறுப்பைக் காங்கிரஸிடம் ஒப்புவித்துவிட்டு வெளியேறியது. 1947-ல் சுதந்திர உதயம், பிறகு இந்து முஸ்லிம் கலவரம், காந்திஜீயின் நவகாளி யாத்திரை, ஒற்றுமைக்காக உபவாசம், 1948 ஜனவரி 30-ம் தேதி கோட்சே காந்திஜீயைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது-இவை எல்லாம் இந்தியாவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/92&oldid=1369362" இலிருந்து மீள்விக்கப்பட்டது