பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

மதும்யக்கம், சீற்றம், கபடு, சூதாட்டம் அக்கரையின்மை, ஆகியவையே எங்களை நிலை பிறழச் செய்கின்றன. பெரியவர்கள் இளைஞர்களுடன் பழகும் தரக்குறைவான தன்மை எங்கள் நன்னடைத்துக்கு ஒரு தடைக்கல். வெறும் கனவுகூட பொய்மைக்கு வித்திடுக்கிறது.

(இருக் 7)

உலகைக் காப்பவ, இறவா நிலையை எனக்களிப்பாய்,

பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து எனக்கு விடுதலையளிப்பாய். (இருக் 7)

அறத்தின் அண்ணலே, நான் என்கிற செருக்குடன் சுற்றிதிரிகிற என்னிடம் இரக்கம் கொண்டு கடைத் தேற்றுவாய். (இருக் 7)

உண்மையின் முகம் பொன்னால் வேயப்பட்ட மூடியினால் மூடப்பட்டுள்ளது, செங்கதிர் ஒளியில் மிளிர்ந்து கொண்டிருக்கிற வாழ்வின் மூலாதாரமாகிய பண்பும் நானே ஓம் என்கிற உன்னத நிலைக்கு உரியவனும் நான் தான். (யசுர் 40)

த.கோ - தி.யூரீ