பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 警

1 18

கலைமகள் திருவாய்மொழி

மொழி மகளாகிய கலைமகள் மனம் சார்ந்த உயிரார்ந்த பல்கலை அறிவின் ஊற்றுக் கண்ணாக விளங்குகிறாள். அவளே மனத்தைத் தூய்மைப படுத்துகிறாள். அந்தக் கலைமகள் வழிபாட்டுக்குப் பலனளிக்கிறாள் தேவியே, நாங்கள் தொடங்கிடும் நற்பணிகளுக்கு வாக்களித்து வெற்றியை அளிப்பாய். (இருக் 1)

எங்கள் உள்ளுயிர், அறிவு ஆகியவற்றின் ஆற்றல்களைச் செயல்படச் செய்வது நீயே. அறிவை நாடிச் செல்பவர்களுக்கு ஆழ்ந்த அறிவை அளிக்கிறவளும் நீயே. (இருக் 1)

அவளிடமிருந்துதான் அருமறைகளாகிற ஆழிகள் வீறி எழுகின்றன. - அவளுடைய அருளால்தான் உலக முழுவதும் உயிர்த் துடிப்புடன் இயங்கிவருகிறது. அவள் மூலமாகவே அழிவற்ற கடவுள் தன்னைக்

நற்றமிழில் நால் வேதம் سسة