பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

இறைவா, என்னையும் உன்னையும் போன்றே திண்ணிய மனமுடையவனாகவும் முற்றுணரும் நுண்ணறிவுள்ளவளாகவும் ஆக்குவாய். யாவரும் என்னை நட்புக்கண்ணுடனும், அதே போன்று நானும் அவர்களை நட்புக் கண்ணுடனும் பார்க்க அருள் புரிந்திடுவாய். எங்களிடையே முழுமையான இணக்கம் ஏற்படட்டும்.

(யசுர் 36)

எவனொருவன் யாவரையும் மிகவும் விரும்புகிறானோ, அவன் அந்த உயிரினங்கள் யாவற்றிலும் தன்னில் ஒரு பகுதியையே காண்கிறான். எவன் தன்னை உலகளாவிய ஆன்மாவின் ஒரு பகுதியாகக் கருதுகின்றானோ, அவன் எவரையும் தாழ்வாக எண்ணுவதில்லை, அத்தகையவன் எவரையும் வெறுப்பதில்லை. தானும் வெறுப்பு, மனக்கவலை, வருத்தம், ஆகிய உணர்ச்சிகளுக்கு அடிமைப் படுவதில்லை. யாவரையும் விரும்புபவனாக மாறுகிறான். மகிழ்ச்சியாகிற நீரோட்டத்தில் மிதந்து செல்கிறான். தன்னை விரும்பும் ஒவ்வோர் ஆன்மாவினாலும் வளமை பெறுகிறான். (யசுர் 40)

மெய்யறிவு பெற்ற எந்தப் பற்றுடையவனொருவன் பணிவன்புடன் தன் பணிகளைச் செய்கிறானோ, அவன் கடவுளால் வாழ்த்துதலைப் பெறுகிறான். உலகின் பரந்த தொடுவானம் இறைவனின் 수

த.கோ - தி.யூரீ