பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

கூட்டாகச் சேர்ந்து நாங்கள் உன் புகழ் பாடுவோமாக.

(இருக் 10)

உங்கள் யாவருடைய உள்ளக் கிடக்கைகளும் ஒரு முகமாகச் செல்லட்டும். உங்கள் யாவருடைய உள்ளத் துடிப்பும் ஒரே சீராயிருக்கட்டும். உங்கள் உள்ளங்களில் எழுகின்ற ஒற்றுமை நிலைக்கட்டும் என்றும். ஆழமான உடன்பிறப்பாண்மையும், ஒற்றுமையும் உங்களை ஒன்று சேர்க்கட்டும்.

(இருக் 10)

நமது உந்தாற்றலாக இருக்கட்டும.

அவரவர்கள் ஈடுபட்டுள்ள துறைகளில் சிலர் உயர்ந்த நிலையை அடைந்திருக்கலாம், சிலர் பொது நிலையை எட்டியிருக்கலாம், மற்றும் சிலர் தாழ்ந்த நிலையில் இருக்கலாம், ஆயினும் ஈட்டிய செல்வத்தில் சமமாகப் பங்கு கொள்ளுங்கள். செழுமைப் படைப்புக்கான மூலப் பொருள்கள் உங்களிடமே இருக்கும்போது சமூகத்தில் மலிந்துள்ள குறைகளைக் களைந்திடுவதிலும், மக்கள் நலனுக்காக எந் நேரமும் பாடுபடுவதிலும் உங்கள் வாழ்கைகையை நேர்ந்தளியுங்கள். 1£

(இருக் 5)

த.கோ - திரு