பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

தனக்குத் தெரிந்ததை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் அமைதி காக்கும் முனிவரைவிட 鷲 அதிகமாக மதிக்கப்படுகிறார். ஒரு பணக்காரப் பிசிறனைக் காட்டிலும் தாராள மனமுடைய எளிய மனிதன் எவ்வளவோ உயர்ந்தவன். (இருக் 10)

J.

சமூகத்தின் அனைத்து மக்களும் பொதுவான ஒரு குறிக்கோளை வைத்துக் கொள்ளட்டும். அவர்களின் நெஞ்சத்துடிப்பு ஒரே நிலையில் இருக்கட்டும். அவர்கள் எண்ணங்களும் ஒரே நிலையில் இருக்கட்டும். இந்த நிலையில் அவர்களுடைய ஒருங்கிணைந்த ஆற்றலும், வேறுபட்ட திறமையும், தங்கள் இலட்சியங்களைத் திருப்தியுறும் வகையில் அடைந்திட அவர்களுக்கு பெரிதும் உதவும். (இருக் 10)

உன் வாழ்க்கை முறையில் ஓர் ஒற்றுமையும், இணக்கமும் இருக்கட்டும் . கட்டுப்பாட்டுடன் இரு. ஒத்துழைப்பவனாக இரு. ஒரே குரல் கொடு. மன உறுதியுடன் முடிவெடு. பழங்கால முனிவர்கள் அறிஞர்கள், தலைவர்கள், ஆசான்கள் ஆகியோர் தங்கள் தங்கள் கடமைகளை எவ்வாறு அப்பழுக்கின்றி செய்து வந்தனரோ அவ்வாறே நீயும் வழி தவறிச் செல்லாமல் உன் கடமைகளை நன்கு செய்து முடித்திடு.

(இருக் 10)

த.கோ - தி.யூரீ