பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

பேரண்டத்தின் கண்ணாகிய பகலவன் இறைவன் அருளிய வரம். (அதர் 10)

அவனிடத்தில்தான் தெய்வீகப் பேரண்ட ஆற்றல்கள் யாவும் ஒன்றாகின்றன. அனைத்துப் புகழ்ப் பாடல்களுக்கும் போற்றுதலுக்கும் அவனே தந்தை. தெய்வீகப் பண்புகள் எல்லாவற்றிற்கும் தூதுவன் அவனே. நிலப்பரப்புகள் யாவற்றையும் அவன் தூய்மைப்படுத்துகிறான். மேன்மையான இடங்களிலிருந்து கொண்டு உயிர்ப்பவை, உயிர்ப்பற்றவை, ஆகிய எல்லா உயிரினங்களையும் அவன் கண் காணிக்கிறான்.

அவனிடத்தில் எல்லாக் கடவுளர்களும் ஒன்றாக ஒன்றுகின்றனர். (அதர் 13)

ஆழ்ந்த தெய்வீக ஈடுபாடு, மனவுறுதியைப் பருப்பொருளின் மேல் செலுத்துதல் ஆகியவற்றின் விளைவாகத் தோன்றியதுதான் ஆற்றல் வாய்ந்த இந்தப் பேரண்டம். அண்டத்தைப் படைத்தவன் என்கிற முறையில் தான் இங்கு எடுத்துக் கூறப்படுகிறான் இறைவன். முதலில் ஆழிகள் தோற்றுவிக்கப்பட்டன. அதன் பின்னர் தோன்றியதுதான் வையகம். இந்த வகையில் கோளாற்றல்களை வெவ்வேறு மாறுபட்ட அமைப்புகளில் பேரண்டப் பெருமானாகிற சிற்பி செதுக்கியுள்ளான். அவனவன் செய்த நல்வினை தீவினைப் பயன்களைப்

த.கோ - தி.பூரீ