பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§g 296

புனிதமான உலகப் பேரொளியைக்

y

t

t

கொண்டுள்ளது தாய் நிலம். அனைத்து வல்லமையுள்ள இறைவனும், அறிவில் சிறந்த முனிவர்களும் எங்களுக்குச் செல்வமளிக்கட்டும். (அதர் 12)

உறக்கமற்ற எப்போதும் விழித்திருக்கிற பேருலக ஆற்றல்களால் நெறி மாறாமல் பாதுகாக்கப்படும் நிலத்தாய் பலவகையான செல்வங்களை நமக்கு அளிப்பாளாக.

நமக்கு ஒளியூட்டுவாளாக. (அதர் 12)

அழிவற்ற மெய்மைக்குள் நிலை பெற்றிருக்கிறது துறக்கம், கடல் நீரின் உயிர்நாடியே இதுதான். முதன் முதலில் நிலம் , இந்த கடல் நீருடன் இணைந்து கொண்டது. இந்தத் தாய் நிலம் நமக்கு ஒளியையும் ஆற்றலையும் அருளட்டும். (அதர் 12)

இரவு பகலாக எல்லாப்பக்கங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிற யாவருக்கும் பொதுவான ஆறுகள் மண்ணகத்தில் உள்ளன. இந்த நிலத்தாய் பலவகையான செல்வங்களையும் நமக்கு அளிப்பாளாக, நமக்கு ஒளியூட்டுவாளாக.

(அதர் 12)

ஓ, நிலத்தாயே, உனது, அழகிய குன்றுகள், பனிபடர்ந்த மலைகள், கானகங்கள் இவை யாவும்

量°C凝。

  • “I

நற்றமிழில் நால் வேதம்