பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O9

நான் அடைந்துள்ளேன். தாய்ப்பசு கன்றுக் குட்டியை நக்கிக் கொடுப்பதுபோல், நானும் எனது துணை நீரோட்டத்துடன் சேர்ந்து கரைகளை நக்கிக்கொண்டு எங்கள் பொதுவான இருப்பிடத்திற்குச் செல்கிறோம்.

(இருக் 3)

அலைகளைக் கிளப்பிக் கொண்டு, பொங்கியோடி இறைவன் நமக்கு அளித்த இருப்பிடத்தைச் சென்றடையும்பொழுது எங்கள் உள்ளத்தில் கனிந்து கொண்டிருக்கும் ஆர்வத்தை எவரும் தடுத்து நிறுத்திட முடியாது. ஆறுகளைக் கூவியழைக்கும் பாவலன் - என்ன சொல்லிடப் போகிறான்? (இருக் 3)

அறநெறியை மதிப்பவர்களே, நண்பனாக நான் சொல்லும் சொல்லைக் கேள். சற்று நின்று இளைப்பாறுங்கள். அன்பார்வ மிக்க புகழ்ப் பாடலால் அவர்களுடைய ஆதாரவைக்கேட்டு ஒரு முனிவரின் மகன் ஆறுகளுடன் பேசுகிறான்: (இருக் 3)

"நமது ஓட்டத்தைத் தடை செய்யும் தடங்கல்களை அழித்து, இருதலை கலத்தைக் கொண்ட தலைவன் கால்வாய்களைச் சீராக வெட்டியுள்ளான். அழகிய கைகளையுடைய, நுண்ணறிவுச் செல்வி நம்மை நடத்திச் செல்கிறாள். அவள் கொடுத்த ஊக்கத்தினால் நாங்கள் பிரிந்து பரந்து செல்கிறோம்." (இருக் 3)

த.கோ - தி.புதி