பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

மருந்து சார்ந்த மூலிகைகள்

நம் தாய் நாட்டின் மருத்துவ குணங்கொண்ட மூலிகைகள் பல்வேறு பெயர்கள், பயன்கள் கொண்டவை. ஆயிரக்கணக்கான முளை நிலைப்பில் உள்ளவை, பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன. நூற்றுக் கணக்கான பயன்கள் கொண்டவை. நோயாளியை உடல் நலமுள்ளவனாகவும் வலுவுற்றவனாகவும் ஆக்குகின்றன. (இருக் 10)

மலர்களும் பழமளிக்கும் மருந்துச் செடிகளும் அழகிய கொடித் தளிர்கள் கொண்டவை. விரைவாகச் செல்லும் குதிரைகளைப் போல், இவை நோய்களைக் குணப்படுத்துகின்றன. நோயாளிகளிடம் தங்கள் திறன் நிறைகளை மெய்ப்பிக்கின்றன. அவர்களை உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் வைத்திருக்கின்றன.

(இருக் 10)

நற்றமிழில் நால் வேதம்