பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

அனைத்து உயிராற்றல்களுக்கும் உறைவிடமான தாயே, உலகின் அடிப்படை ஆற்றலே, வேள்விகளின் கொடிச் சின்னமே, உனது பேரொளி வளருவதாகுக. எழுந்திரு, எங்கள் அன்புக்குப் பரிசளி. உலக முழுவதும் பணிந்தேற்றும் அன்னையே மக்களிடையே எங்களுக்கு ஓர் உயர்ந்த இடமளிப்பாயாக. (இருக் 1)

என்றும் நிலைத்திருக்கும் அன்னையின் பிள்ளைகளே இந்த விண்மீன்கள். - இவை எண்ணிக்கையற்ற கண்களிலுள்ள அற்புதமான அழகையும் பேரொளியையும் பெற்றுள்ளன. தெய்வீகப் படைப்புகளின் தொலைவிலோ, அருகிலேவுள்ள இவை எண்ணிலடங்காத விழிகள் அளிக்கும் பேரொளியைப் பெறுகின்றன. - தங்கள் இருக்குமிடத்திலிருந்து எமது நற்குணங்களையும், தீக் குணங்களையும் கண்காணித்து வருகின்றன.

(இருக் 2)

படைப்புத் தொழிலில் மண், விண்வெளி, வானுலகம் மூன்றுமே சரிசமமான நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உடல், மனம், உயிர் ஆகியவற்றிற்கு நிலையான பணிகள் அளிக்கப்பட்டுள்ளன. அவை முறையே உடல் தொடர்பான, மனம் தொடர்பான, தனித்து நிற்பதுமான நிலைகள், அன்னையின் குழந்தைகளே, சின்னஞ் சிறிய விண்மீன்களே, ஞாயிறு பென்னம் பெரிய கோள்கள், உங்களுடைய

நற்றமிழில் நால் வேதம்