பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அகந்தையை மீறட்டும். 'உனது, எனது என்கிற தடைக் கற்களைத் தகர்த்து முன்னேறிச் செல்ல வாழ்த்தி அருள்வாய். 'யான், எனது என்கிற எண்ணங்கள். நீங்கி, - 'நீ உனது என்கிற எண்ணங்கள் மேலோங்கட்டும்.

... • (இருக் 8)

சிறப்புடைய இறைவன் கைக்கெட்டும் தொலைவில்தான் உள்ளான், - - கண்ணுக்குத் தெரியும் தொலைவில்தான் இருக்கிறான். இயற்கையின் எழிலொளியைப் பார், - கடவுள் ஆக்கிய கவிதையைப் பார், இரண்டுமே அழிவுக்கும் இறப்புக்கும் அப்புாற்பட்டவை. - (அதர் 10)

நீயே எங்கள் பாதுகாவலன். நின்னை வழிபடுபவர்க்கு எல்லா நலன்களும் அருள்பவனே. நீயே எங்களின் தோழன், தந்தை, எந்தைக்கு முந்தையே, வழிபடுவார்க்கெல்லாம் நலன்களை ஈந்தருள்பவனே, எங்களுடைய படையல்கள் யாவும் பற்றார்வத்துடன் ஈபவை. மொழியின் அன்னையே, நாங்க்ள் செய்யும் வேண்டுதல் ஒவ்வொன்றும் உனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும். அன்புக்குரிய தேவியே, உன்னுடைய பாதுகாப்பில் எங்களுக்கு அடைக்கலம் கிட்டுவதாகுக.

நற்றமிழில் நால் வேதம்