பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

உனது ஆதரவின் துணைகொண்டு எங்களை எதிர்ப்பவர்கள் எவரையும் வலுவிழக்கச் செய்வோம். நீ எங்கட்குரியவன், நாங்கள் உங்கட்குரியவர்கள். *

(இருக் 8)

பால்குடிக்கக், கன்றினைப் பசுவினிடம் அழைத்துச் செல்வதைப் போல உன் நண்பனை நின்னிடம் அழைத்துக் கொள். இசைக் கலைஞனே, அன்பைப் பொழிபவனை எழுப்புவாய். உணவு நிறைந்திருக்கும் அமுதசுரபி போல், வாரி வழங்கும் வள்ளவலான இறைவனைச் செயல்படத் தூண்டுக. (இருக் 10)

பேரொளி படைத்த ஒருவனே, என்றும் நிலைத்திருக்கும் ஞாயிற்றினை, மக்கள் மேல் ஒளிவெள்ளம் பாய்ச்சுகிற விண்மீனைப் படைத்தவன் நீ. எங்கள் அருகில் இருக்கும் வீறொளியன் நீ சிறந்த மிக நெருங்கிய அருங்கலையே, பாடகனைச் சற்றே எண்ணிப்பார், அவனுக்கு அருள் புரிக. (இருக் 10)

உன் பற்றாளனாகிய நான், ஆழ்ந்த நீரோடையின் இசையில்தான் இருக்கிறேன், ஆயினும் எனக்கு வேட்கை எடுக்கிறதே. அருளளிக்கும் ஆண்டையே, என்னிடம் இரக்கம் காட்டு. என் வேட்கையைத் தணிப்பாய்,

மகிழ்ச்சியையும் நிறைவையும் எனக்களிப்பாய். (இருக் 7)

த.கோ - தி.பூரீ