பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

உண்மையிலேயே இருப்பவன் நீ உயர்ந்த நிலைகளின் முதல்வன் நீ தான். (இருக் 1)

பேராழிகள் போன்று உள்வாங்கி வெளியேற்றும் உனது ஆற்றல் அளவு கடந்தது. உனது பேரொளிப் பிழம்பால் உலகனைத்தையும் காக்கிறாய் நீ. பேராழிகள் போல் நீயும் ஆற்றலைச் சேர்த்துக் கொள்கிறாய். ஞாயிற்றின் கதிர்கள்போல வெளியேற்றுகிறாய்.

. (இருக் 1)

எங்கும் நிறைந்த செம்பொருளே, உனது புகழ் மேலுலகங்களுக்கும் நானிலத்துக்கும், உலகின் மற்ற பகுதிகள் அனைத்துக்கும் ஒளி சேர்க்கிறது. . (இருக் 1)

உள்ளேயும் வெளியேயுமான போராட்டங்களில் நீ காக்கும் மனிதன், அனைத்துத் கீழ்மைகளிலிருந்தும் விடுபட்டுச் சிறந்த அறிவொளி பெறுகிறான். (இருக் 1)

மெய்யறிவின் உறைவிடமே, அனைத்தையும் அறிந்தவனே, விளக்கமறியாத உன் அன்பனுக்கு வழிகாட்டியாக இரு. கெட்ட வழிகளிலிருந்து மீண்டு வந்து நல்வழியை அவன் கடைப்பிடிக்கப்படும் வலுவுடையவர்கள். ஆனால் கெட்ட பாதைகளில் செல்வோரிடமிருந்து ஆற்றலற்றவர்கள்

த.கோ - தி.யூரீ