பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 ১***

முரடனுடைய சீற்றத்தைத் தணிக்கிறாய். செம்பொருளே உன் பெருமையைக் கூறச் சொற்களில்லை. (இருக் 2)

தனிமுதன்மைப் படைப்பாளியே, நீ இட்ட முறைமைகளை எவரும் மீற இயலாது. பாலைவனத்தில் தண்ணிரைத் தேடியலையும் காட்டு விலங்குகளும் நீ படைத்தளித்த நீர் நிலைகளில் தண்ணி குடித்து வேட்கை தீர்த்துக் கொள்கின்றன. பறவைகள் உணவருந்தவே நீ காடுகளைப் படைத்தாயோ! (இருக 4)

மதிப்புணர்ச்சிப் போற்றுதலுடன் நான் உண்மையை பின்பற்றுகிறேன். உயிர் வாழ்கின்ற எல்லாமே உன்னருளினால்தான் வாழ்கின்றன. உலகின் ஒரே வலிமை அளிப்பவன் நீ. விண்ணிலோ, மண்ணிலோ, இருக்கும் செல்வம் அனைத்தும் உனதே. (இருக் 4)

உலகைப் படைத்த தெய்வீகனே. அறிவு, பற்றுறுதி இவற்றில் முதிர்ந்தவர்களுக்கு இறவா வரம் அளிக்கிறாய் நீ. பின்னர் அவர்களுக்கு உனது முழு பாதுகாப்பை அளிக்கிறாய். தொடர்ந்து அவர்களுக்கு உன் ஆசிகளை வழங்கிய வண்ணமிருக்கிறாய். (இருக் 4)

o:

த.கோ - தி.பூரீ *}ళ్లు't: