பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

66

'இறைவா, எனக்கருள் புரிவாய். தன்னைத் தானே புரிந்து கொள்ளும் தகுதியைக் கொடுக்கும் நெறியில் என்னை இட்டுச் செல்வாய். (இருக் 1)

செம்பொருளே, தூய மேன்மையான அன்புகாட்டி என்றனுக்கு மதிப்பரிய வாழ்த்தினை அருள். நிறைந்த செல்வமளி, வாழ்க்கையின் இடர்பாடுகளைக் கடக்க அது உதவும். கேட்டார் பிணிக்கும் சொல்லாண்மை, நல்லூழ், நற்பெயர் ஆகியவற்றை எனக்களிப்பாய். (இருக் 3)

பெருந்தலைவ, எங்களை நெருங்கி வருவாய். வரும்பொழுது உன் தெய்வீக ஆற்றல்களையெல்லாம் கொண்டு வருக. அவற்றினைப் பகுத்துண்டு மகிழ்ச்சியடைவோம்.

(இருக் 6)

வையகம் நிறைந்த வான்பொருளே, எங்கள் வழிபாடுகளுக்குச் செவி சாய்த்து எங்கள் இதயங்களில் குடி கொள்வாய் புனிதமான நரந்தம் புல் இருக்கையாகக் கொள்ளப்படுவது போல்,

எங்கள் நெஞ்சங்கள் உனக்கு இருக்கையாக இருக்கட்டும். (இருக் 6)

பரம்பொருளே, ஆறுகள் ஆழியில் அணைவது போல, உன்னிடம் இணைவதற்காக நாங்கள் ஓடோடியும் வருகிறோம், செழுமையான இடம் என்றெண்ணி உழாத நிலத்திற்கு

நற்றமிழில் நால் வேதம்