பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்திருப்பவன் *

வாழ்க்கை போராட்டத்தில் சந்திக்கும் எல்லாத் o

தடைகளையும், இடர்பாடுகணையும் வெற்றி கொள்கிறான். *

- (இருக்4)

தன் வாழ்க்கையை இறைவனின் பணியில் எவன் ஈடுபடுத்திக் கொள்கிறானோ, அவனை இறைவன் தன் அன்பினால் அரவணைத்துக் கொள்கிறான். அப்படிப்பட்டவன் இறைவனின் இன்னருளைப் பெறுகிறான், - அவன் அன்பில் திளைக்கிறான். (இருக் 5)

இறைவனின் நினைப்பு எவனிடம் என்றுமிருக்கிறதோ, அவனைத் துதிப்பாடல்கள் விரும்புகின்றன, அவனை நாடுகின்றன. - அவனை நோக்கி இறைவன் இவ்வாறு கூறுகிறான். உறுதியும் அளிக்கிறான் : "என்றும் நான் உனக்கு உயிர் நண்பனாய் இருப்பேன், உற்ற துணையாயிருப்பேன்." (இருக் 5)

தன்னலம் கருதாமல் பிறருக்கு எவன், பணி புரிகிறானோ அவன் இறைவனுக்கு வேண்டியவனாகிறான். இறைவனின் நற்குணங்களை ஏற்றுக் கொள்கிறான்.

(இருக் 6)

தன்னிடம் உள்ளன்பு கொண்டிருப்பவர்களுக்கு இறைவன் அச்சமில்லாத, வீரமுள்ள குழந்தைகளை உருவாக்கும் 1£ பேற்றினை அருளுகிறான். (இருக் 8)

த.கோ - தி.ழரீ