பக்கம்:நற்றிணை-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 10s நகையா கின்றே தோழி தகைய அணிமலர் முண்டகத்து ஆய்பூங் கோதை மணிமருள் ஐம்பால் வண்டுபடத் தைஇத் துணிநீர்ப் பெளவங் துணையோடு ஆடி ஒழுகுநுண் நுசுப்பின் அகன்ற அல்குல் 5 தெளிதீங் கிளவி யாரை யோவென் அரிதுபுணர் இன்னுயிர் வெளவிய ரீயெனப் பூண்மலி நெடுந்தேர்ப் புரவி தாங்கித் தான்நம் அணங்குதல் அறியான் நம்மில் தான்அணங் குற்றமை கூறிக் கானல் 10 சுரும்பிமிர் சுடர்நுதல் நோக்கிப் பெருங்கடற் சேர்ப்பன் தொழுதுகின் றதுவே. தெளிவுரை : தோழி: "அழகு மிகுதியான மலர்களை யுடைய கழிமுள்ளியினின்றும் ஆய்ந்தெடுத்த மலர்களாலே தொடுத்த பூமாலையினை, நீலமணி போன்ற கூந்தலினிடத்தே வண்டுகள் வந்து மொய்க்கும்படியாகச் சூடிக்கொண்டனை! தெளிந்த நீரையுடையதான கடலிட்த்தே தோழியரோடும் சென்று விளையாடினே! நேரிதாய் நுணுகிய இடையினையும், அகன்ற அல்குல் தடத்தையும், தெளிந்த இனிய சொல்லையும் உடையாளே! அரிதாகச் சேர்ந்திருக்கின்ற எனது இனிய உயிரைக் கவர்ந்த நீதான் யாவளோ?" என்று அவன் வினவினன். பூண்கள் மிகுதியான நெடுந்தேரிற் பூட்டிய குதிரைகளின் வாரைக் கையிலே தாங்கியபடியே நின்ருன். தான் நம் மனத்தைக் கவர்ந்தாளுய், நம்மை வருந்தச் செய்ததனை அறியாதவனய், நம்மாலே தான் வருத்த முற்றமை மட்டுமே எடுத்துக் கூறினன். கானற் சோலைக் கண்ணே, வண்டுகள் மொய்த்த ஒளிகொண்ட நம் நெற்றியை நோக்கியவாறே, பெரிய கடல்நிலத் தலைவனை அவன், நம்மைத் தொழுதும் நின்ருன். இதுதான் நகை யுடையதாய் இராநின்றது காண்! - சொற்பொருள் : தகைய-தகுதியுடைய; தகுதியாவது கொய்து சூடுதற்கான தகைமை, அழகுற இதழ் விரிந்திருத் தலும் ஆம். முண்டகம்-கழிமுள்ளி. மணி-நீலமணி. தைஇஒப்பனை செய்து. துணிநீர்-தெளிந்த நீர்; அலை மிகுதியற்றி ருக்கும் கடல்நீர். 'துணை’ என்றது தோழியரை. ஒழுகு நுண் இடை-நேரிதாய் நுணுகிய இடை. தெளிதீம் கிளவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/103&oldid=774094" இலிருந்து மீள்விக்கப்பட்டது