பக்கம்:நற்றிணை-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 115 கிளைகளைக்கொண்ட ஒமை மரத்தினது பட்டுப்போன கிளைகளிடத்தே ஒடுங்கிக் கிடந்தபடி, சிள்வீடு' என்னும் வண்டுகள் ஒலி செய்தபடி இருக்கின்ற, சேய்மையிலுள்ள நாட்டிற்குச் செல்லும் வழிகளே. இன்னபடியாகக் கடந்து செல்வேமென்னும் கோட்பாட்டோடு கடந்து சென்று பொருள் செய்தலை அல்லாது, வீட்டிடத்தே சோம்பியிருந் தோர்க்கு அரிய பொருளின் சேர்க்கையானது இல்லை யென்று, இதுவரையிலும் ஒருப்பட்டு எழாத அவர் நெஞ்சமானது, இதுகாலை உடன்பட்டுப் பொருள் செய்தலைப் பற்றியே கருத்லினல், மேற்கொண்ட வினையிடத்தே குறுக்கிட்டு அவரைத் தடுத் தலைச் செய்தில போலும்! ஆதலினலே, இனி ஆற்றியிருத்தலே யல்லாது, யாம் செய்யத் தகுந்ததுதான் யாதுமில்லை! சொற்பொருள் : ஒமை-ஒருவகைக் காட்டு மரம். ஒல்கு நிலை-இடுக்குப் பட்டுள்ள இடங்கள். சிள்வீடு' என்பது ஒருவகை ஒலி வண்டு. கறங்கும்-பெரிதாக ஒலிக்கும். திறம். செய்தற்கான கூறுபாடுகள். சுவர்ப்பாவை-சுவரிடத்து எழுதப்பெற்ற பாவை, காழ்புனைந்து இயற்றிய வனப்பமை நோன்சுவர்ப் பாவை’ என்று அகநானூற்றுள்ளும் கூறப் பெறும் (அகம். 369.) என்றும் மாரு திருக்கும் அழ'கென் பதனை இவ்வாறு குறித்தனர். முடுகு விசை-முடுகிய விரைவு. ‘நாயின் நாக்குப் பெண்களின் அடிக்கு உவமையாதலை,” 'வருந்து நாய் நாவின் பெருந்தகு சீறடி என்பதலுைம் (பொருநராற்றுப்படை அறியலாம். விளக்கம் : இவளுடைய அழகும் குணனும் அவன் செலவை மாற்ற இயலாவாயினமையின், இல்லிருந் தோர்க்கு அரும்பொருட் கூட்டம் இல்லை என்னும் உலகியலறம் அவன் உள்ளத்தே முகிழ்த்து வலுப்பெற்றது. இனி, ஆற்றியிருத்தலே செயற்குரியது என்பதாம்! உள்ளுறை : ஒமை மரத்தினது பட்டுட்போன கிளைகளிள் இடுக்குகளிலே ஒடுங்கிக் கிடந்து சிள்வீடுகள் கறங்கும்’ என்றனர். அவ்வாறே யாமும் பொலிவழிந்த மனைக் கண்ணே ஒடுங்கிக் கிடந்து புலம்பினமாய்த் தனிமைத் துயரத்தைக் கழித்து ஆற்றியிருத்தலே இனிச் செய்தற்குரிய அறமாகும் என்ற தாம். ஒமை இல்லத்துக்கும், பட்டுப்போன கிளை இடுக்குகள் இல்லத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கும், சிள் வீடு தலைவிக்கும், அதன் கறங்கல் தலைவியின் பிரி வாற்ருதே புலம்பும் புலம்பலுக்கும் பொருத்தமாவன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/117&oldid=774109" இலிருந்து மீள்விக்கப்பட்டது