பக்கம்:நற்றிணை-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: . நற்றிணை தெளிவுரை 149 270. கூந்தல் முரற்சியிற் கொடிதே! பாடியவர் : பரணர். திணை : நெய்தல். துறை : தோழி வாயில் நேர்கின்ருள், தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது, உடனிலைக் கிளவி வகையால். [ (து.வி.) 5ಓ)456ಗಿ! பரத்தைமை உ ற வாலே தலைவிக்கு அவன்பால் வருத்தமிகுதி உண்டாயிருந்தது. அவன் மனைக்கு மீண்டு வந்தபோது, அவள் அவனை ஏற்க உடன்படாள் ஆயினுள். அதனையறிந்த தோழி, அவர்களுக் குள் சந்து செய்விப்பாளாக, அவனைக் குறைகூறுவாள் போலத், தலைவியின் மனமும் அவனுக்கு இரங்குமாறு, அவளும் உடனின்றபோது கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) - தடந்தாள் தாழைக்குடம்பை நோனத் தண்தலை கமழும் வண்டுபடு நாற்றத்து இருள்புரை கூந்தல் பொங்குதுகள் ஆடி உருள்பொறி போல எம்முனை வருந்தல் அணித்தகை அல்லது பிணித்தல் தேற்ருய் 5 பெருந்தோள் செல்வத்து இவளினும் எல்லா எற்பெரி தளித்தனை நீயே பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்தர் ஒட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே . . . . 10 மறப்பன் மாதோகின் விறல்தகை மையே. தெளிவுரை : பெருத்த தூற்றினை உடையதான தாழையிடத்தே அமைந்த தன் கூட்டினிடத்தே இருக்கவிய லாதாகியது ஒரு வண்டு. குளிர்ந்த நறுமணமானது மிகுதி யாகக் கமழ்தலை உடையவும், வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்ன்த உடையவும்ான மலர்களைச் சூடியுள்ள், இருளைப்போலும் கருமையான மகளிரது கூந்தலை நோக்கி அது சென்றது. அவ் விடத்தேயுள்ள பூக்களிலுள்ள மிகுதி யான மகரந்தத் துகள்களினுள்ளே ஆடியதனலே மயக்க முற்று, நிலத்தே அது உருண்டும் விழுவதாயிற்று. அதனைப் ப்ோல, எம் முன்பாக வந்து நீயும் வருந்துதல்தான் நினக்கு அழகாயிருக்கின்றது. இதுவல்லாது, இவளை நின்பால் அன்பி ேைல பிணித்துக் கொள்ளுதலுக்காவன எதனையும் நீதான் |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/153&oldid=774149" இலிருந்து மீள்விக்கப்பட்டது