பக்கம்:நற்றிணை-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

c > . | 150 நற்றிணை தெளிவுரை தெளியமாட்டாய். பெருத்த தோள்களாகிய செல்வத்தை யுடைய இவளைக் காட்டினும், ஏடா, நீதான் எதனிடத்தே பெரிதும் அன்பு காட்டுகின்றனயோ? இதுதான் அழகுடைய விரிந்த பிடரி மயிராற் .ெ பா லி வுற்றவும், விரைந்த செலவைக் கொண்டவுமான நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரசராகிய பலரையும் தோற்று ஓடச் செய்தவனும், அதனைச் செய்து முடித்த வெற்றி வேலினை ஏந்தியவனுமான நன்னன் என்பான், அவ் வரசரது உரிமைமகளிர் கூந்தலைக் கொய்து முறுக்கிய கயிற் ருலே, அவர்களின் போர் யானைகளைப் பிணித்துக் கொணர்ந்த கொடுஞ் செயலினும் காட்டில் கொடிதான தாகும். ஆதலாலே, நினது வலிமையான தகுதிப்பாட்டினை யும் யானும் மறந்துவிடுவேன், காண்பாயாக! சொற்பொருள்: தடந்தாள் - பெரியதான தூறு; தூறு என்றது அடிமரத்தை. குடம்பை - கூடு. நோன்றல் - பொறுத்தல்; நோஞ - பொறுக்க மாட்டாமை. முனை - முன்பாக; "ஐ'சாரியை. பொறி . வண்டு. பொங்கு துகள் - பொங்கும் மகரந்தத் துகள்; துகள் பொங்குதல் வண்டு கிண்டுதலால். தேற்ரு: - தெளியாத, பெருந்தோள் செல் வம் - பெருத்த தோள்களாகிய செல்வம்; மகளிர்க்குத் தோள்கள் பெருத்திருப்பது பேரழகு தருவதாகலின் அதனைச் செல்வம் என்றனர். அளித்தல் - அன்பு செய்தல். பொற்பு - அழகு உளை - பி ட ரி ம யி ர். பரி - குதிரையின் விரைந்த செலவுக்குப் பெயர். நன்மான் - நல்ல சாதிக் குதிரைகள். வேந்தர் - அரசர்; இவர் பகையரசராகிய பிண்டன் முதலியோர். முரற்சி - முறுக்கிய தன்மை விறல். வலிமை. விளக்கம்: "மணத்தாலே சிறந்த தாழையின்பால் அமைந்த தன் இருப்பிடத்தை வெறுத்துச் சென்ற வண் டானது, பிற பூக்களாலே அழகுபெற்ற மகளிரது கூந்தலி டத்தே சென்று மொய்த்து, அவ்விடத்தே பொங்கிய துகளி ல்ேயும் ஆடியபடி மயங்கித் தரையிலே வீழ்ந்தாற்போல, நீதானும் நின் மனைக்குரிய சிறந்தவளாகிய இவள்ை வெறுத் துச் சென்று, பகட்டுக் கவர்ச்சியினராகிய பரத்தையரி டத்தே கூடிக் களித்தனையாய் மயங்கி, அந்த அடையாளங் கள் நின் மேனியிடத்தேயும் தோன்றும்படியாக, எம் முன்னேயும் வந்து தாழ்ந்து நிற்பாய் ஆயின என்கின்ருள் - தோழி. வண்டு தலைவனுக்கும், தாழைக் குடம்பை தலைவிக் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/154&oldid=774150" இலிருந்து மீள்விக்கப்பட்டது