பக்கம்:நற்றிணை-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றின் தெளிவுரை 153° வாயாது, குடிக்குப் பழியும் வந்தடைதலின், அதனைக் காணு முன், தான் உயிரைவிட்டுவிட விரும்புகின்ருள் தாய். தாழி கவிப்ப - தாழியாற் கவித்து மூட, இது இறந்தபின் உடலைப் புதைக்கும் பண்டைய தமிழ் மரபு. தாவின்று - வலி யழிந்து. விளக்கம்: பனையின் குருத்தோலையை வெட்டி விரித் துப் பணியிற் பதப்படுமாறு வைத்தல் இன்றும் காணும் வழக்கம் ஆகும். தன் மகளின் நல்ல வாழ்விலே ஆர்வங் கொண்ட தாயது மனம், இவ்வாறு அவள் செய்த பழிக்குரிய செயலாலே நொந்து நலிவுற்று வெதும்புகின்றது. 'தமர் அவளே மீட்டு வருவர்' என்பது, அவள் கொண்ட் நம்பிக்கை. அதற்குள் தன் உயிரையேவிட்டுவிட நினைக்கின்ருள் அவள். இறைச்சி 'எருமைக் கன்றும் பூந்தாதிலே கிடந்து துயில் கொள்ளும்’ என்றது, அத்தகைய வளமனை வாழ்வை யும் விரும்பாது, தன் காதலனின் மார்பே பாயலாகத் துயிலக் கருதி, அவனுடன் போகிய தன் மகளது காதற் பெருக்கை வியந்து கூறியதாகும். அதனை வாழ்த்தி உள்ளம் மகிழ்வதும் ஆகும். இதல்ை, அவள் தமரின் கண்ணிற் படாதபடி, தன் காதலனுடன் அவனுார்க்கே நலமாகச் சென்று சேர்ந்து, அவனையே மணந்து, இன்பமான இல்வாழ் விலே திளைப்பதையே அந்த அன்னை விரும்புகின்ருள் என்பதும், அவளைத் தமர் மீட்டுக் கொணர்தலை அவள் விரும்பவில்லை என்பதும் விளங்கும். . . | - 272, அலர்வாய் அம்பல் மூதூர் ! பாடியவர்: முக்கல் 47ಡ நல்வெள்ளையார். திணை : நெய்தல். துறை: (1) வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்ருளாய தலைமகள் சொல்லியது; (2) தோழி தலைமகளுக்கு சொல்லுவாளாய்ச் சொல்லியது உம் ஆம். [ (து-வி.) மணந்து கொள்வதிலே மணஞ் செலுத்தாமல், களவு உறவினையே தலைவன் விரும்பினவகை நெடுங்காலம் வந்து ஒழுகி வருகின்ருன். அவனை விரைய மணந்து கொள் வதற்குத் தூண்டும் வகையால், அவன் கேட்டு உணருமாறு தலைமகள் தோழிக்குச் சொல்லுவாள் போலச் சொன்ன தாகவோ (1), அல்லது தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொன்னதாகவோ (2)அமைந்த செய்யுள் இது.) நற்.-40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/157&oldid=774153" இலிருந்து மீள்விக்கப்பட்டது