பக்கம்:நற்றிணை-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நற்றிணை தெளிவுரை 277. அறிவும் கரிதோ அறனிலோய் ! பாடியவர் : தும்பிசேர் கீரனர்; தும்பிசொகினனர் எனவும் பாடம். திணை : பாலை, துறை : பட்டபின்றை வரை யாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய, ஆற்ருளாகிய தலைமகள், தும்பிக்குச் சொல்லியது. ((து. வி.) தலைமகன் தலைமகளை வரைவிடை வைத்துப் பிரிந்து போயிருக்கின்ருன். அவன் நினைவால் அவள் வருந்துகின்ருள். அவன் குறித்தகாலமும் கழிந்தது. அதனல் அவள் துயரமும் பெரிதாயிற்று. அவ்வேளையிலே தம்முட் கூடியிருந்த தும்பிகளை நோக்கி, அவள் தன் நெஞ்சழிந்த லைமையைக் கூறுவாள்போல் அமைந்த செய்யுள் இது.) கொடியை வாழி தும்பி இந்நோய் படுகதி லம்ம யான்கினக் குரைத்தென மெய்யே கடுமை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே? மீனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை 5 நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பிரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனே, அன்பிலர் 10 வெம்மலை யருஞ்சுரம் இறந்தோர்க்கு என்கில உரையாய் சென்றவண் வரவே! தெளிவுரை , தும் பி யே..! என்னளவிலே நீதான் சொடியை! ஆயினும், நீதான் இன்புற்று வாழ்வாயாக! யானே, இப் பிரிவுத்துயரென்னும் நோயின் காரணமாக செத்தொழிவேனுகுக ! யான் நின்னை நம்பி என் நிலையை நினக்கு உரைத்ததனலேதான் இந்நிலை எனக்கு ஏற்பட்டது. நின் உடலோ கருமையானது; அன்றியும் அதனைப்போலவே நின் அறிவும் செவ்விதாகக் கருமையானது தானே! எம் மனையைப் பொருந்தக் காத்திருக்கும் மாட்சிமைப்படப் பெரிதாக அமைக்கப்பட்ட வேலியிடத்துள்ள, நுண்ணிய முட்களையுடைய மரங்களின் மீது பீர்க்குப் படர்ந்துள்ளது. பூந்தாதோடும் பூத்துள்ளதும் குலைகட்டியதுமான அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/168&oldid=774165" இலிருந்து மீள்விக்கப்பட்டது