பக்கம்:நற்றிணை-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. நற்றிணை1தெளிவுரை II விளக்கம் : குறவன் விருப்பத்தோடு மணஞ்செய்து தரினன்றி, அவளை வேறுவழியாக அடைதல் இயலாது என் பவன், காதல் மடமகள்' என்றனன். அவனை மீறி, அவளைப் பெறுதலும் இயல்வதன்று என்பவன் பெறலருங் குரையள்’ என்றனன். அவள் வெளிப்போந்து நின்னைக் காண்பதும், அன்றி நீதான் சென்று அவளைக் காண்பதும் கைகூடா தென்பவன், அருங்கடிக் காப்பினள்’ என்றனன். அரிதின் முயன்று அவளைச் சந்திப்பினும், நின் பேச்சைக் கேட்டு நினக்கு இசைவு தருவதற்குத் துணியும் தகைமையில்லா இளம் பருவத்தாள் என்பவன், 'சொல்லெதிர் கொள்ளா ளேயள்’ என்றனன். அத் தன்மையள் ஆதலின் அவளை ಟ್ಲಿ உள்ளல் கூடாது என்றும் பாங்கன் வலியுறுத்தினன். இதனைக் கேட்டுத் தலைமகன் கலங்கினன் அல்லன். கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும், உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும், பெருநிலம் கிளறினும், தன் திருநல உருவின் மாயா இயற்கையுடைய கொல்லிப் பாவையை அறிவாயே! அதனைப்போலவே அவளும் என் உள்ளத்தாள்; இனி எதலுைம் போதல் செய் யாள்’ என்கின்ருன். இதனால், பாங்கன், அவளைத் தலைவன் பாற் கூட்டுவிக்கவே இனித் துணை நிற்பாளுதல் வேண்டும் என்பது தலைவன் முடிவாகும். கொல்லிப் பாவை அமைந் துள்ள இடத்தைக் குறிப்பிடுவான், நெடுங்கோட்டு அவ் வெள் அருவிக் குடவரை யகத்து' என்றனன். இதன் சிறப்பும், கண்டாரைத் தன் பெருங்கவில்ை தன்பால் ஈர்க்கும் வனப்பும், எவரும் அறிந்தது; அத்துணை வனப்பு மிக்க அழகியள் தலைவி என்பதும் இதல்ை விளங்கும். தெய்வம் காத்தலால் தீதின்றியும், பலவின் பழம் பொருந்தியும் விளங்கும் கொல்லியைப் போலத் தெய்வத் துணையாலே தன் காதலும் தீதின்றி இனிது நிறைவெய்தும் என்ருனும் ஆம். கொல்லியைச் சிறப்பாகக் குறித்தது தலைவன் அப் பகுதியைச் சார்ந்தவனதலாலும் ஆம். கண்டார், தாமே அதன் அழகிலே பித்துற்று அடிமை யாகும் பெருவனப்புக் கொண்ட கொல்லிப் பாவையைப் போலவே, அவளும் அத்துணை வனப்பினள் என்பதும் இதல்ை விளங்கும். வரை-மலை; பெரும்பாலும் இரு நாடு களின் எல்லையாக மலையே அமைதலால் வரை' என்றனர். 'பாங்கன் தலைவனின் துணையாக உடன்செல்லும் இளைஞன். தோழனின் நெருக்கம் பாங்கனுக்கு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/17&oldid=774167" இலிருந்து மீள்விக்கப்பட்டது