பக்கம்:நற்றிணை-2.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮬ178 நற்றிணை தெளிவுரை 284. உள்ளம் பிணிக் கொண்டோள் ! - பாடியவர் : தேய்புரிப் பழங்கயிற்றினர் . திணை: பாலே. துறை: பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்ருளுகிச் சொல்லியது. [ (து. வி.) பொருள் தேடி வரக் கருதிப் பிரிந்து சென்ருனகிய தலைவன், அதுதான் செய்து முடியாத நிலை யிலேயும், மனம் தன் தலைவிபாற் செல்ல ஆற்ருளுகிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) புறந்தாழ்வு இருண்ட கூந்தற் போதின் நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம் செல்லல் தீர்கஞ் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல் 5 எய்யா மையோடு இளிவுதலைத் தருமென உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிதுகனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல 10 விவது கொல்என் வருந்திய உடம்பே? தெளிவுரை : புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், நெய்தற்போதின் நிறத்தைப்பெறும் கரிய இமைபொருந் திய மையுண்ட கண்களையும் உடையவள் அவள்! அத்தகை யாளான, என் உள்ளத்தைத் பிணித்துக் கொண்டவள் இடத்தேயே யாமும் இனிச் செல்வேம். அவள் கொண்டிருக் கும் பிரிவுத் துயரத்தையும் தீர்ப்பேம்' என்று, எம் நெஞ்ச மானது எமக்குச் சொல்லும். "செய்யக் கருதியதான வினையை முற்றவும் முடித்தலைச் செய்யாது, இடையிலே அதற்கு ஊறு செய்தலானது, அவ்வினையாலே விளையும் பயனை அடையாமையோடு, இகழ்ச்சியையும் நமக்குக் கொடுக்கும்." என்று எழும் உறுதிப்பாட்டை ஆராய்கை யினலே, என் அறிவோ, சிறு பொழுதளவுக்கும் நீதான் விாையாதிருப்பாயாக’ என்று எனக்குச் சொல்லும். அவ் டத்தே, விளங்கிய, தலையிலே ஏந்தியுள்ள கொம்பினையுடைய களிறுகள் ஒன்ருேடொன்று தமக்குள் மாறுபட்டுப் பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/182&oldid=774181" இலிருந்து மீள்விக்கப்பட்டது