பக்கம்:நற்றிணை-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 179 யிழுக்கத் தேய்ந்த புரியையுடைய பழைய கயிற்றைப் ப்ோல, என் வ்ருந்திய உடம்புதானும் இருப்ாலும் இழுக்கப் பெற்று இற்றுTiழத்தான்வேண்டுமோ? - சொற்பொருள்: போது என்ற்து நெய்தற் போதின. ஈரிதழ் - குளிர்ச்சி பொருந்திய இமைகள். செல்லல் - துன்பம். எவ்வம் - இடையூறு. எய்யாமை - அறியாமை; அடையாமை. இளிவு . இகழ்ச்சி. மாறு பற்றிய இருபாலும் பற்றி இழுத்த. விளக்கம்: உள்ளம் அவளிடத்தேயே பிணிப்புக் கொண்டமையாலே, அவளிடத்து மீண்டு போதலையே கருதிற்று அறிவு, அங்ங்னமாகப் பிணிப்பு உருமையினலே, ஆராய்ச்சியின்மேற் சென்றது என்று பொருள் கொள்ளல் வேண்டும். மகளிர்ப்ால் காமுற்று மயங்கினர்க்கு அறிவுத் தெளிவும் ஆராய்ச்சியுமே முற்றத் தெளிவாகத் தோன்ரு என்பதும் இதல்ை உணரப்படும். தேய் புரிப் பழங்கயிறு மிகச் சிறந்த உவமை. இதனல், இதனைப் பாடியவரும் இப் பெயரே பெற்றனர். 'வருந்திய உடம்பு வீவது கொல்லோ! என்பதன்கண் வெளிப்படும் மனவேதனையை உணர்க. உள்ளம் அறிவு இரண்டும் மாறுபட்ட களிறுகட்கும், உடம்பு தேய்புரிப் பழங்கயிற் றுக்கும் நல்ல உவமைகள். மேற்கோள்: நோயும் இன்பமும் இருவகை நிலையில் என்னும் சூத்திர உரையுள் இதனை மேற்கோள் காட்டி, "இஃது உணர்வு உடையதுபோல இளிவரல் பற்றிக் கூறியது' என்பர் நச்சினர்க்கினியர். ஞாயிறு திங்கள் அறிவே நாணே என்னும் சூத்திர உரையுள், இச் செய்யு ளின் உறுதி தூக்கத் தூங்கி யறிவே, சிறு நனி விரையல்’ என்னும் அடிகளை இளம்பூரணரும் எடுத்துக் காட்டுவர். 285. எறிபுனத்துப் பகல் வருவான்! பாடியவர்: மதுரைக் கொல்லன் வெண்ணுகளுர்; மதுரைப் பொற்கொல்லன்'வெண்ணுகளுர் எனவும் கொள் வர். திணை : குறிஞ்சி. துறை தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்க அம்ப லும் அலருமாயிற்று என்று கூறியது. [ (து. வி.) தலைவன் வந்து, செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்த தோழி, தலைவிக்குச் சொல்வாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/183&oldid=774182" இலிருந்து மீள்விக்கப்பட்டது