பக்கம்:நற்றிணை-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* A & - &) '206 நற்றிணை தெளிவுரை கொடியவர் என்பதையும் காட்டும். பொருளே கருத்தினராத லின், அருள்நோக்கு இன்றிச் செயிர் நோக்கே கொண்டவர் என்று கொள்க. பிணத்தை நாடி வானிற் பறக்கும் எருவைச் சேவலும் அஞ்சித் தன் கிளையிடம் செல்லும் என்றது, அவரது கொடிய போரைக் குறித்துச் சொன்னதாம். பெருமலை தழிஇய நோக்கு இயையுமோ? என்பது, மனத்திற்குச் சொல்லும் முடிபு. இறைச்சிப் பொருள் : எருவைச் சேவலானது தண்ணுமை யின் ஒலிக்கு அஞ்சித் தன் சுற்றத்திடம் நோக்கிப் பெயர்ந்து போகும் என்றது, யாம் பொருள் தேடி வருத்லைக் குறித்துச் சென்ருலும், இவள் பிரிவாற்படும் வேதனையை எண்ணி, இடை வழியில், மீண்டு வருதலையே நினைப்போம்போலும் என்றதாம் . பயன் : இந்த எண்ணத்தின் பயனவது, அவன் தான் போகக் கருதிய செலவைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பான் என்பதாம். 299. வில்லெறி பஞ்சி! பாடியவர் : வடம வண்ணக்கன் பேரிசாத்தனர். திணை : நெய்தல். துறை : தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல் லியது. ((து. வி.) தலைமகன் சிறைப்புறத்தான் என்பதனை அறிந் தனள் தோழி. அவன், தலைவியை விரைவிலே மணம் புரிந்து இல்லற வாழ்வைத் தொடங்குதல் வேண்டும் என்று கருது கின்ருள். அவன் பாலும் அந்த நினைவை எழச் செய்தற்கு நினைப்பவள், தலைவியிடம் சொல்வாள்போல, அவ்னும் கேட்டுத் தெளியுமாறு இவ்வாறு கூறுகின்றனள்.) உருகெழு யானை உடைகொண் டன்ன ததர்பிணி அவிழ்ந்த தாழை வான்புதர் தயங்கிருங் கோடை தாக்கலின் நுண்தாது வயங்கிழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும் அலர்காண் 5 காமிலம் ஆகுதல் அறிதும் மன்னே. வில்லெறி பஞ்சி போல மல்குதிரை வளிபொரு வயங்குபிசிர் பொங்கும் நளிகடற் சேர்ப்பனெடு ககாஅ ஊங்கே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/210&oldid=774212" இலிருந்து மீள்விக்கப்பட்டது