பக்கம்:நற்றிணை-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 227 இத்துயரமெல்லாம் வந்துற்றன என நீயும் நினைவாய். என்பாலுள்ள மிகுதியான அன்பினலே பெரிதும் வருந்தவும் செய்வாய்! அங்ங்ணம் எண்ணி வருந்தாதிருப்பாயாக! நம் தலைவன், வாழையினது கொழுமையான மடலிடத்தேயுள்ள அகன்றஇலைகளிலே மழைத்துள்கள் கலந்து தங்கியிருக்கின்ற தான, பெருமலை நாட்டினன் ஆவான்! அவனுடைய நட்பானது நமக்குத் துன்பந்தருவதாக ஆகின்றவிதனை அறிபவர் எவரும் இல்லையே?’ என, நீயும் கூறுவாய். ஆயினும், அவருடைய நட்பினது உறுதியை யான். நன்முகத் தெளிந்திருக்கின்றேன்; ஆதலின், அவர் வரும்வரையிலும் பொறுத்துத் தேறியிருப்பேன் என்று நீயும் அறிவாயாக. - கருத்து : ક્યારે வரும்வரை ஆற்றியிருப்பேன் என்பதாம். சொற்பொருள் : வரி - இரேகைகள். ஆழல் - வருந்தல்: துயருள் அழுந்தலும் ஆம். விழுமம் - துன்பம். தளி - மழைத் துளி. தேறுதல் - தெளிதல். கேண்மை - கலந்து உறவாகும் நட்பு. கலாவும் - கலக்கும். - விளக்கம்: "தலைவன் பிரிந்து போயின களவொழுக்கத்தின் பல காலத்தும், வாய்மை பிறழாதே மீண்டும் குறித்தபடியே வந்தவதைலின், அவன் நம்பேரிற்கொண்ட அன்பும் உறுதியான தாகலின், அவன் தவருதே வருவான் என்று தான் தேறியிருப்ப தாகத் தலைவி கூறுகின்ருள். தோழியைத் தேற்றும் வகையிலே தலைவி இவ்வாறு கூறினளேனும், அவள் உள்ளத்தவிப்பினைத் தாமே காட்டும் மேனியின் மெலிவை அவளால் மூடி மறைக்க வும் இயலவில்லை. ஆனால், 'யான் செய்தன்று இவள் துயர் என்று தோழி வருந்துவதில் பொருளில்லை எனவும், தான்ே அவனைத் தன் உயிர்க்காதலகைக் கொண்டு அவன் நட்பை விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும் உரைக்கின்றனள். கொழுமடல் அகலிலைத் தளிதலைக் கலாவும் பெருமலை நாடன்' என்றது, தலைவனும் அத் தளிபோலத் தனக்கு அருள் செய்யும் கனிவுடையவன் என்பதாம். கொழுமடல் அகலில்ைத் தளிதலைக் கலாவியதும், வாழையானது பெர்திவிட்டுப் பூவைத் தள்ளும்; இவ்வாறே அiன் அருள அவளும் இல்லறம்ாற்றி நன்மகப்பெற்று இன்புறுவள் என்பதுமாம். - / کمر உள்ளுறை : வாழை மடலிலே மழைத்துளிகள் கலந் - திருக்கும் என்று உரைத்த்து, தன் உள்ளத்திலேயும் அவன் . அவ்வாறே தங்கிக் கலந்திருப்பவன் என்று உரைத்ததாம், \ ..Y.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/231&oldid=774235" இலிருந்து மீள்விக்கப்பட்டது