பக்கம்:நற்றிணை-2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- நற்றின் தெளிவுரை - 283 குடிகளுக்கெல்லாம் முறையாகப் பகுத்துக் கொடுத்தனள். அத்தகைய நெடிய மலை நாடனே! - - மிக்க வலிய சினமுடைய களிற்றியானையானது, வருகின்ற புலியினை எதிர்பார்த்திருக்கும் இரவின் கண்ணே, இங்கு வருவதனை நீயும் அஞ்சமாட்டாய்; ஆயின், யான் அஞ்சுவேன். பாம்பின் ஈரிய புறத்தையுடைய புற்றினைக் கார்மேகம் போலக் கவிந்துகொண்டு, புற்ருஞ்சோருகிய இரையினை ஆராய்கின்ற கரடிக்கூட்டம் தோண்டியபடி இருக்கும். மலேயைச் சார்ந்த சிறுநெறியிலே, இனியும் இரவிலே வாராதிருப்பாயாக. - கருத்து: ஆகவே, விரைய வரைந்து வந்து தலைவியை மணந்து கொள்வாயாக என்பதாம். சொற்பொருள் : பிணர் - சொரசொரப்பான தன்மை; இங்கே மயிர்ச் சிலிர்ப்பை உணர்த்தும். சுவல் - பிடரி, தோல் முலைப் பிணவு - குட்டிகளையுடையதாகவே, அவற்றுக்குப் பாலூட்டியதேைல வற்றிய முலையுடைய பெண்பன்றி. கைம் மிக - மிக அதிகமாக. கவர்தலின் - கவர்ந்து உண்ணுதலிளுலே. புழை - பொந்து. அல்கி - பதுங்கி. கெண்டி - இங்கே பன்றியின் தசை குடிமுறை பகுத்தல் - ஊரிலுள்ள குடிகள் யாவர்க்கும் முறையாகப் பகுத்துத் தருதல். உரவு வலிமை. உறுபுலிநாளும் வரும் புலி. காரென - கருமேகம் போல; இது கர்டியின் உருவைக் குறித்தது. எண்கினம் - கரடிக் கூட்டம். உள்ளுறை : தினை கவர்ந்த பன்றியைக் கானவன் கொன்று கொணர்ந்து தர, அவன் மனைவி அதனை அறுத்து ஊரிலுள்ள குடியினர் அனைவருக்கும் முறையாகப் பகுத்துக் கொடுக்கும் மலைநாடன்' என்றது, அவ்வாறே தலைவ்னும் இல்லறம் தொடங்கித் தான் ஈட்டிவரும் பொருளையெல்ல்ாம் மனைவியால் அளிக்க, அவள் ஐம்புலத்தாரையும் பேணிக் காத்து அறம் பேணுபவளாவாள் என்பதாம். விளக்கம் : தன் முயற்சியாலே தேடியதெனினும், அதனை மனையோளிடம் தந்து, அவள் குடியினர்க்கெல்லாம் பகுத்து அளிக்கத் தான் மகிழும் அக்கால ஆடவர் மனப்பான்ம்ை இதன்கண் விளக்கப்பட்டுள்ளது. வருநெறிக்கு அஞ்சுவல் என்றதால்,அவ்வச்சத்தால் தலைவிக்கு ஊறு நேரிடா வகையில் தலைவன் அவளை வரைந்து கொள்வதற்கு முயற்சி செய்பவன் ஆவான் என்பதாம். எண்கினம் அகழும் என்றதால் கரடி களின் மிகுதியும், பாம்புப் புற்றுக்களின் மிகுதியும் கூறினள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/287&oldid=774320" இலிருந்து மீள்விக்கப்பட்டது