பக்கம்:நற்றிணை-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C)ു † ત્રીજા έωu--mή - 3つgびr; தனதெளிவு. " 299 ((து . வி.) களவிலே வந்தொழுகுவானகிய தலைவன், வந்து, ஒருபக்கமாக மறைந்திருத்தலை அறிந்த தோழி, அவன் மனத்தை வரைவு வேட்டலில் செல்லுமாறு தூண்டக் கருது கின்ருள். அவள், அவன் கேட்கும்படியாகத் தலைவிக்குச் சொல்வதுபோல அமைந்த செய்யுள் இதுவாகும்.) அணிவரை மருங்கின் ஐதுவளர்ந் திட்ட மணியேர் தோட்ட மையார் ஏனல் இரும்பிடித் தடக்கையின் தடைஇய பெரும்புனம் காவல் கண்ணினம் ஆயின்-ஆயிழை!கம்கில இடைதெரிந்து உணரான், தன்மலை 5 ஆரம் விேய அணிகிளர் ஆகம் சாரல் நீளிடைச் சாலவண் டார்ப்பச் செல்வன் செல்லுங் கொல் தானே-உயர்வரைப் பெருங்கல் விடரகம் சிலம்ப, இரும்புலி களிறுதொலைத் துரறுங் கடியிடி மழைசெத்துச் 10 செந்தினை உணங்கல் தொகுக்கும் இன்கல் யாணர்த்தம் உறைவின் ஊர்க்கே. தெளிவுரை : ஆராய்ந்த அணிகளைப் பூண்டுள்ளவளே! அழகிய மலைப்பக்கத்திலே செழுமையாக வளர்ந்ததும், நீல மணி போன்ற தோட்டினைக் கொண்டதுமான, கருமை பொருந்திய தினைக்கதிர்கள்,கரிய பிடியானையின் பெருங்கையைப் போல வளைந்து தொங்கும் பெரிய தினைப்புனத்தினை, நாம் காவல் காப்பதனை நினைத்தோமாயின், . நம் காதலன் நம்முடைய நிலைமையை இடையிலே தெரிந்து உணராதேயே வருபவன். தன் மலையிடத்தேயுள்ள சந்தனத்தைப் பூசியுள்ள அழகு கிளர்கின்ற மா பிலே, மலைச்சாரலின் நெடுவழியிலேயுள்ள மிகுதியான வண்டினம் வீழ்ந்து மொய்த்து ஆரவாரிக்க வருபவனும் அவன். அவன் தர்ன், உயர்ந்த மலையிடத்துள்ள பெரிய பிளப்பிடம் எல்லாம் எதிரொலிக்கும்படியாக, பெரிய புலி யானது களிற்று யானையைத் தொலைத்து முழங்கும் கடுமையான முழக்கத்தைக் கேட்டு, இடியின் முழக்கமோ? என்று நினைத்து, முற்றத்திலே காயவைத்திருக்கும் செந்தினையின் காய்ந்த மணிகளைக் கூட்டிக் குவிக்கும், இனிய மலைவருவாயினையுடைய, தம் உறவினரோடு தான்வாழும் தன் ஊருக்கும் மீண்டு போவான் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/303&oldid=774357" இலிருந்து மீள்விக்கப்பட்டது