பக்கம்:நற்றிணை-2.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 நற்றிணை தெளிவுரை கருத்து : “அவன் தலைவியை மணந்து, தன் ஊருக்குத் தன்னுடன் அழைத்துச் சென்று முறையாகப் பிரியாதுறையும் குடும்பவாழ்வை இனி நடத்தவேண்டும் என்பதாம். சொற்பொருள் : அணிவரை. அழகிய மல்ை; மருங்கு - பக்கம்; மலைச்சாரல். ஐது வளர்தல் - சிறப்பாகச் செழித்து வளர்தல். மணியேர் தோடு - நீலமணி போன்ற கரும்பின் தோடு. மையார் ஏனல் - கருமைபொருந்திய தினைக்கதிர்; தடைஇயவளைந்துள்ள. பெரும்புனம் - பெரிய திணைப்புனம்; கண்ணுதல் - நினைத்தல். அணிகிளர் - அழகுகிளர்தல்; அணிகள் ஒளிர்தலும் ஆம். சால - மிகுதியாக. கடியிடி - கடுமையான முழக்கம். செத்து - என்று நினைத்து. தினை உணங்கல் - காய்ந்த தினை மணிகள். யாணர் - புதுவருவாய். தம் உறைவின்ஊர் . தம்மவரோடு வாழும் வாழ்தற் கினிதான ஊர். உள்ளுறை : புலி யானையை வீழ்த்தி முழங்கிய வெற்றி முழக்கத்தை, இடிமுழக்கம் என்று பிழைபட நினைத்து. மழை வருமென அஞ்சிக் காய்ந்த தினையைக் குவிக்கும் ஊர் என்றனள். தலைவனை வரவொட்டாதபடி எழுந்த ஊரலரினத் தாய் திரியவுணர்ந்து, கட்டும் கழங்கும் காணற் பொருட்டுத் தலைவியைப் புனங்காவலின் விலக்கி, இல்லத்திற்கு அழைத் தேகுவாள் என்பதாம். விளக்கம் : செழித்த தினைக்கதிர் பிடியான கைபோலத் தொங்கும் பெரும்புனம்' என்றது, அங்ங்ணம் மயங்கிக் களிற்றி யானை வருதல் கூடும் என்பதாம். இது, புனங்காவல் மேற் கொண்ட தலைவியுடன் தலைவன் வந்தொழுகும் களவை நுட்பமாகச் சுட்டியதுமாம். 'இடை தெரிந்து' என்றது, எழுந்த ஊரலரையும், அன்னை ஏற்பாடு செய்துள்ள வேலனை அழைத்துக் கட்டுக்காண முயலும் முயற்சி போன்றவற்றையும். இதல்ை, இனி இற்செறிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் உணர்த்தினள். சந்தனம் பூசிய மார்பிலே சால வண்டு ஆர்ப்பச் செல்வன் செல்லுங்கொல்' என்றது, பிற மாதர் அவனை விரும்புமாறு நம்மைக் கைவிட்டுப் போவான் போலும் என்றதாம். புலிமுழக்கை இடிமுழக்கென மயங்கித் தினை தொகுக்கும் ஊரன் என்றது. அவனும் நம்முடைய உண்மை நிலையினை உணராதே, தன் இன்பநாட்டமே மிகுதியான மயக்கினன் என்றதாம். - பாடபேதங்கள் : செல்வன் செல்லுங்கொல் தானே: இன் பல்யாணர், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/304&oldid=774360" இலிருந்து மீள்விக்கப்பட்டது