பக்கம்:நற்றிணை-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(£ . /6:5 لادن) (ع\ضا را)n) நற்றிணை தெளிவுரை . 301 .. - اللعبيدق - J பயன் தலைவன் தலைவியை மணங்கொள்ளுதலிலே முயற்சி செய்பவனகி, அவளைப் பிரியாது இன்புறும் மனையுறை வாழ்க்கையைப் பெறுவதற்கு நாடுவான் என்பதாம். - 345. தெளிவே தேய்க பாடியவர் : நம்பி குட்டுவர்ை. திண : நெய்தல். துறை : தெளிவிடை விலக்கியது. - •. ((து.வி.) வரைந்து கொள்ளாது காலம் தாழ்க்கின்ற காதல்ன் நிலையை உளங்கொண்டு, இடையிடை நேரும் சிறுசிறு பிரிவுக்கும் ஆற்ருதவளான தலைவி கலங்குகின்ருள். அவளைத் தெளிவிக்கக் கருதித், தலைவன், 'யான் விரைய வந்து வரைவேன்; பொறுத்திரு' என்கின்ருன். அது கேட்ட தோழி, அவனை அவ்வாறு கூறுதல் வேண்டாவென விலக்கிக் கூறுவதுபோல் அமைந்த செய்யுள் இது) கானற் கண்டல் கழன்றுகு பைங்காய் ல்ேகிற இருங்கழி உட்பட வீழ்ந்தென. உறுகால் தூக்கத் தூங்கி ஆம்பல், சிறுவெண் காக்கை ஆவித் தன்ன, வெளிய விரியும் துறைவ! என்றும், 5 அளிய பெரிய கேண்மை நும்போல், சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் தேரு நெஞ்சம் கையறுபு வாட, டிேன்று விரும்பார் ஆயின், வாழ்தல் மற்று எவனுே? தேய்கமா தெளிவே! 10 தெளிவுரை : மிகுதியான காற்று எழுந்து மோதுதலாலே, கடற்கரைச் சோலையிலேயுள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்றன. பசுமையான காய்கள்: நீல நிறத்தையுடைய கருமையான கழியிடத்தே அவை வீழ்ந்து உள்ளேயும் போகின்றன. அவை வீழ்ந்ததாலே, ஆம்பலின் அரும்பானது சாய்ந்து, சிறிய வெண்ணிறமுள்ள நீர்க்காக்கை வாய்திறந்து கொட்டாவி விட்டாற்போல வெளியவாய் மலர்கின்றன. அத்தகைய துறைக்கு உரியோனே! எக் காலத்தினும், கருணையே செய்தலையுடைய பெரிய கேண்மையினைப் பாராட்டும் நும்மைப் போலச் சால்பினை எதிரேற்றுக் கொண்ட செம்மை உடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/305&oldid=774362" இலிருந்து மீள்விக்கப்பட்டது