பக்கம்:நற்றிணை-2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sos - நற்றிணை தெளிவுரை தெளிவுரை : நிலவானலோ, நீல நிறத்தையுடைய வானிடமெல்லாம் பலவான கதிர்களைப் பரப்பியதாய், பால் மிகுந்த கடலைப் போல, எங்கும் பரந்திருக்கின்ற தன்மைத் தாய் உள்ளது: ஊராளுலோ, தழைந்து வருகின்ற பேரொலியோடு நிறைந்து, ஒன்ருகச் சேர்ந்தெழும் பேராவாரத்தோடு, தெருவெங்கும் திருவிழாக் கொண்டாடும் தன்மைத்தாய் உள்ளது; காடாளுலோ, பூக்கள் மலர்ந்து நிறைந்துள்ள பொழிலிடங் கள் தோறும், தாம் விரும்பும் துணையோடு கூடியவாக வண்டினங்கள் திரிந்து ஒலி செய்வதாக உள்ளது; யானே, புனைந்துகொண்ட அணிகளையும் கழன்று வீழுமாறு செய்தவளாகத், தனிமைத்துயராலே கொண்ட வருத்தத்தோடு, மிகுதியான இருளையுடைய இந்த இரவுப் பாதெல்லாம், கண்களை மூடாதவளாகத் துயிலின்றி வருந்தியவளா யுள்ளேன். அதேைல, இந்த உலகம், தன்னேடு மகிழவில்லையென்று நினைத்து என்னேடு வந்து போரிடுமோ? அல்லது, என்னுடைய துயரங்கொண்ட நெஞ்சமானது, தன்னோடு வருந்தவில்லை யென்று சென்று, உலகத்தோடு போய்ப் போரிடுமோ? எதுவுமே தோன்றவில்லையே எனக்கு? கருத்து : 'எங்கும் மகிழ்ச்சியே தோன்றும் வேளையிலும், தனிமைத் துயரம் என்னைமட்டுமே வருத்துகின்றது' என்பதாம். சொற்பொருள் : பான்மலி கடல் - பால் நிறைந்த கடல்: நிலவு பாற்கடல் போல எங்கும் ஒளிபரப்பிப் பரந்தது என்பதாம். ஒலிவருதல் - தழைந்து வருதல். சும்மை - பேரொலி. கலி - ஆரவாரம். விழவு விழா: இதுவேனில் விழா ஆகலாம். கனையிரும் கங்குல் - மிகுதியான இருளையுட்ைய இரவுப் பொழுது. புலம்பு - தனிமைத் துயரம். விளக்கம் : நிலவொளியானது காமத்துயரை மிகுவிக்கும் என்பதால், அதனை முதலில் கூறினள். பாற்கடலிடத்தே நிலவு தோன்றியபின், அடுத்து ஆலகாலமும் நஞ்சாகத் தோன்றியது என்பதும் நினைக்க. ஊர் விழா நினைந்து வருந்தியது, விழவிலே கலந்தாடும் மகிழ்ச்சியும் துணையோடியிருப்பவர்க்கே இன்பந் தருவது என்பதல்ை ஆகும். அடுத்து, துணையோடு வண்டினம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/312&oldid=774378" இலிருந்து மீள்விக்கப்பட்டது