பக்கம்:நற்றிணை-2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

とつrnrt24 ก่า சிலிைலும் لأهم، سالمحع - 1ۓ یہ , , , , .ے : - நற்றினை தெளிவுரை - ' 309 ஒலித்தலைக் கூறியது, சிற்றறிவினவான அவையும் துணையைப் பிரியாது கலந்து மகிழ்கின்ற போதில், தான் தனித்திருந்து வருந்துவதை எண்ணியது. தனிமையாலே வருந்துவாரின் மனம், துணையோடு கலந்து செல்லும் எந்த உயிரின்த்தைக் காணும்போதும், மேலும் கனன்று நலியும் என்பதாம். ஆகவே, ஊரோடு ஒன்ருது தனித்துள்ள நான், என்னேடு துயரப்படாத ஊரைப் பொருதுவேனே? அல்லது, ஊர் தன்னேடு மகிழாத என்னைப் பொருதுமோ? என்றது, அவள் தனிமை மிகுதியின் தாங்கவியலாத் தன்மையைப் புலப்படுத்துவதோடு, மனித மனத்தின் இயல்பையும் காட்டும். தன்னைப்போலவே தன் சுற்றுப்புறமும் பிறரும் விளங்குவதை எதிர்பார்ப்பதும், விளங்காதபோது நொந்து வருந்துவதும் மனவியல்பு ஆகும். பயன்: தல்ைவியின் ஆற்றமை மிகுதியானது. இந்தப் புலம்பலாலே சிறிது தணிதல் கூடும் என்பதாம். 349. என்னென கினையும்? பாடியவர் : மிளைகிழான் நல்வேட்டனர். திணை : நெய்தல். துறை : தலைமகன், தோழி கேட்பத் தன்னுள்ளே சொல்லியது. ((து. வி.) தலைவன் ஒருவன். தலைவியின் தோழியின் உதவியால் தலைவியை அடைய் முயல்கின்றன். அவள் அவனுக்கு இசையாளாய் ஒதுக்கவே, அவன் துயரம் பெருகுகின்றது. அவன், அவள் கேட்டுத்_தன் நிலையைத் தெளியும்படியாகத், தனக்குள்ளே சொல்வதுபோல அமைந்த செய்யுள் இது.) கடுந்தேர் ஏறியும், காலிற் சென்றும், கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும், கைதை தூக்கியும், நெய்தல் குற்றும், புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இணையம் ஆகவும், செய்தார்ப் 5 பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை ஒளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப், பின்னிலை முனியா கம்வயின், ... . என்னென கினையுங்கொல் பரதவர் மகளே! 10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/313&oldid=774380" இலிருந்து மீள்விக்கப்பட்டது