பக்கம்:நற்றிணை-2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q ζ) * élり:V。 330 భ్ని \٩١د دمي நற்றிணை தெளிவுரை தோழி என்பது, அந்நாளைய நெய்தல்நிலை மக்கள், தம் குறை முடித்லை விரும்பிப் போற்றிவந்த கடல்வழிபாட்டு மரபைக் குறிக்கும். கடல் தெய்வத்தை வழிபடுதலால், தலைவன் கடல் கடந்து பொருள்தேடச் சென்றவனதலும் நினைக்கவேண்டும். பாடபேதம் : கடல்கெழு கடவுள். பயன் : இதல்ை தலைவி அவன் வரும்வரை பொறுத் திருந்து வந்ததும் கூடியின்புற்று மகிழ்வாள் என்பதாம். - றப்பு : பசும்பூண் வழுதியின் மருங்கைப் பட்டினத்து எழில். - 359, அஞ்சுதும் யாமே! பாடியவர்: கபிலர். திண குறிஞ்சி. துறை : தோழி தழைய்ேற்றுக் கொண்டு நின்று, தலைமகள் குறிப்பின் ஓடியது. ((து - வி.) தோழியின் உதவியோடு தலைவியைப் பெற முயல்கின்ருன் தலைவன். அவளிடம் தான் கொடுத்த தழை யுடையைத் தலைவிக்குத் தருமாறு கேட்கின்ருன். தோழியின் நிலைமை சங்கடமாகிறது. மறுத்தால், அவன் வருந்துவான். தலைவி உடுத்தால் அன்னை சீறுவாள். என் செய்வது என்று தானே வருந்துவது போலத், தலைமகள் கருத்தினைத் தான் ஏற்று நடப்பவள்போலக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா - அலங்குகுலக் காந்தள் தீண்டித், தாதுகக் கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் உடுக்கும் தழைதந் தனனே; அவையாம் உடுப்பின் யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் 5 கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை வாடல கொல்லோ தாமே-அவன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை அடுக்கத்த கொயற்கருங் தழையே! தெளிவுரை : மலையினிடத்தே மேய்ந்தபடியிருந்த சிறிய கொம்பை உடையதான செம்மைநிறப் பசுவானது, அசை கின்ற கொத்தையுடைய காந்தளைத் தீண்டிவிட்டது. அப்போது, அதனின்றும் பூந்தாதுக்கள் தன்மேலே உதிர,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/334&oldid=774428" இலிருந்து மீள்விக்கப்பட்டது