பக்கம்:நற்றிணை-2.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 335 குளிர்ந்துள்ள நறுமணம் கமழும் காட்டினிடத்தையும் கடந்த வாய், நெடிய நாவையுடைய ஒள்ளிய மணியானது ஒலியாலே சிறந்ததாக ஒலி முழக்க, மாலைப் பொழுது மயங்கிய வேளையிலே மணல் மிகுந்த அகன்ற நாம் மாளிகையின் வாயிலிலே நம் நெடுந்தகையின் தேரையும் கொண்டு வந்து சேர்த்தன. எந்நாளும் கொண்டிருந்த தீர்தற்கரிய துன்பம் எல்லாம் முற்ற விலகுமாறு நீக்கி, அவனுக்கு விருந்தினைச் செய்கின்ற விருப்பின ளாக, நம் திருந்திய நலனணிந்த தலைவியும் ஆதலால், யாரும் கவலையடைதல் வேண்டாம் என்பதாம். - கருத்து : “அவள் துயர் மறந்து அவனை வரவேற்பாள்" என்பதாம். - சொற்பொருள் : சிறுவீமுல்லை சிறுபூக்களையுடைய முல்லை; முல்லையின் ஒரு வகை இது; இதன் பூக்கள் மிக்க மண்ம் உடையன; இதனைச் சாதிமுல்லை என்பர். அலரி - அலர்ந்த பூக்கள். இளைஞர் - ஏவலிளைஞர். படை-பொற்பட்டம்; கலணை எனக்கொண்டு சேணமாகவும் கொள்வர்; தேரிலே பூட்டப் பெருங் குதிரைகட்குச் சேணம் வேண்டாம் என்பதால் முகத் திலே அணியும் முகபடாம் என்றே கொள்க. படுமழை - மிகுந்த மழை, படுவெயில் எனவருவதும் நினைக்க. தண்நறும் புறவு என்றது, மழையிற் குளிர்ந்து மண்மணம் கமழும் காடு என்றற்காம், மான்ற-மயங்கிய; இது பொழுதைக் குறித்தது: இதனை அந்தி என்பது மரபு. மணல்மலி வியனகர் - பெருமன யிடத்தே, மணல் மிகுந்துள்ள முற்றப்பகுதி. அகல நீக்கல் - முற்றவும் போக்குதல். விருந்தயர் விருப்பு - விருந்து செய்யும் விருப்பம்; இது தலைவனுக்கும் பிறர்க்கும் இன்சுவை உணவு அளித்து உபசரித்தலும், அவனுக்கு ஆசைதீர முயங்கி இன்பம் தருதலும் என்னும் இருவகை விருந்தையும் குறிக்கும். விளக்கம் : தலைவனும் இளைஞரும் முல்லை சூடினர் என்றதும், தேர் படுமழை பொழிந்த தண்நறும்புறவின் வழியாக வந்தது என்றதும். அதுதான் கார்காலம் என்று சுட்டித் தலைவி யின் சினத்தைத் தணிவித்ததாம். நெடுந்தகை என்றது, தலைவனின் உயர்வைச் சுட்டி, அவன் சொற்பிழையான் என்று போற்றியதாம். - - பயன் ; தோழி வாயில்களிடம் தலைவி விருந்தயர்வாள் என்று கூறும் பேச்சைக் கேட்டலுறும் தலைவியானவள், தன் சினத்தை மறந்து இன்முகத்தோடு தலைவன வரவேற்று மகிழ் வாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/339&oldid=774438" இலிருந்து மீள்விக்கப்பட்டது