பக்கம்:நற்றிணை-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நற்றிணை தெளிவுரை -سسسسسسw பயன் : தலைவன் தெளிவடைந்து மணந்துகொள்ள வேண்டிய முயற்சிகளிலே மனம் விரைவான் என்பதாம். 369. நீங்துமாறு அறியேன்! பாடியவர்: மதுரை ஒலைக்கடையத்தார் நல்வெள்ளையார். திணை நெய்தல். துறை : பட்ட பின்றை வரையாது பொருள் வயிற் பிரிந்து, ஆற்ருளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது. - * ((து. வி.) அறத்தொடு நின்றனள் தலைவி. அதன் பின்னும் வரைந்து வராமல், வரைபொருள் குறித்துப் பிரிந்து போயினன் தலைவன். இதல்ை, தலைமகள் ஆற்றமை மிகுதி யாகின்றது. அதனைப் பொறுத்திரு என்று தேறுதல் கூறும் தோழிக்கு அவள் கூறும் எதிர் உரையாக அமைந்த செய்யுள் இதுவாகும்.) சுடர்சினங் தணிந்து குன்றஞ் சேர கிறைபறைக் குருகினம் விசும்புகந்து ஒழுக எல்லை பைபயக் கழிப்பி முல்லை அரும்புவாய் அவிழும் பெரும்புன் மாலை இன்றும் வருவது. ஆயின், கன்றும் 5 அறியேன் வாழி-தோழி!-அறியேன் ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி வாஅன் இழிதரும் வயங்குவெள் அருவிக் கங்கையம் பேர்யாற்றுக் கரையிறங் திழிதரும் சிறையடு கடும்புனல் அன்னவென் 10 கிறையடு காமம் ந்ேது மாறே. தெளிவுரை : தோழி! கதிரோன் தன் சினம் தணிந்தவகை மேற்றிசைக் குன்றத்தைச் சென்றடையவும், நிறைந்த சிறன்க யுடைய நாரைக் கூட்டமானது ஆகாயத்திடத்தே நெருங்கிச் செல்லவும், பகற் பொழுதையெல்லாம் மெல்ல மெல்லப் போக்கி முல்லையின் அரும்பு வாய்திறந்து மலரவும், பெரிய புன்மையுடைய மாலைக் காலமானது நேற்றுவரையும் நம்மைத் துன்புறுத்தியது. இன்றும் அதுதான் வருமானல் மூங்கில்கள் வளர்ந்த உயர்ந்த இமயமலைத் தொடரின் உச்சியிடத்தே, வானினின்றும் வீழ்கின்றதுபோல வீழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/354&oldid=774472" இலிருந்து மீள்விக்கப்பட்டது