பக்கம்:நற்றிணை-2.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 நற்றிணை தெளிவுரை பாடபேதங்கள் : துறையினை, ஊடல்நீட ஆற்றய்ை நின்ருன், முன் நிகழ்ந்தன்ைப் பாணற்குக் சொல்லியது' என ஒன்ருக்கிக் கொள்வ்ர்; இலங்கு நகர் விளங்க, நின்றனன் அல்லனே யானே எற்கண்டு; உண்கண் புதைத்து வந்ததுவே. பயன் : இதனைக் கேட்கும் தலைவி, தன்னுடைய பொறுப் பின் கடமையை நினைந்தாளாய்த், தலைவனை ஏற்றுக் கொள்வாள் என்பதாம். - 371. பெயல் தொடங்கினவே பாடியவர் : ஒளவையார். திணை : முல்லை. துறை : வினை முற்றி மறுத்தரா நின்றன் பாகற்குச் சொல்லியது. ((து - வி.) சென்ற வினையானது முடிந்ததன் பின்னே, தேரேறித் தன் ஊர் நோக்கி வருவானகிய தலைவனின் உள்ளத் திலே, தலைவியின் நினைவே மேலோங்கி நிற்கின்றது. குறித்த கார்காலமும் தொடங்கியதால், அவள் வருந்துவாளே என்ற நினைவும் தொடர்கிறது. அவன், தேரை விரையச் செலுத்து மாறு பாகனைத் தூண்டுவதாக அமைந்த செய்யுள் இது.) காயாங் குன்றத்துக் கொன்றை போல, மாமலை விடரகம் விளங்க மின்னி, மாயோள் இருந்த தேஎம் நோக்கி, வியலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப் பெயல்தொடங் கினவே பெய்யா வானம் 5 கிழல்திகழ் சுடர்த்தொடி ஞெகிழ ஏங்கி அழல்தொடங் கினளே ஆயிழை; அதனெதிர் குழல்தொடங்கினரே கோவலர்தழங்குகுரல் உருமின் கங்கு லானே! தெளிவுரை : பாகனே காயா மரங்களையுடைய மலையி னிடத்தே கொன்றைப் பூக்கள் மலர்ந்து சரம் சரமாகத் தொங்கும்; அதனைப்போல, பெரிய மலைப்பிளப்பிடங்கள் விளங்கித் தோன்றுமாறு மேகங்கள் மின்னலிடுகின்றன. மாமை நிறத்தவளாகிய அவள் இருந்த இடத்தை நோக்கியும் அவை செல்லுகின்றன. அகன்ற கரிய ஆகாயத்திடமெல்லாம் மறைந்து படும்படியாக எங்கணும் பரவியும் நிறைகின்றன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/358&oldid=774480" இலிருந்து மீள்விக்கப்பட்டது