பக்கம்:நற்றிணை-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

רא \ o,\\ 份^ - 30 )א நற்றிணை தெளிவுரை 210. செல்வமும் செய்வினப் பயனும்! பாடியவர்: மிளைகிழான் நல்வேட்டனர். திணை : மருதம். துறை தோழி, தலைமகனை நெருங்கிச் சொல்லுவாளாய் வாயில் நேர்ந்தது. ((து-வி.) பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன், மீன்டும் தன் வீட்டிற்கு வருகிருன். தலைவி புலந்துகொள்ள, அவள் புலவியைத் தணிவிக்க உதவுமாறு தலைவன் தோழி யிடம் வேண்டுகின்றன். அவள், அவன் செயலைக் கண்டித்து உரைத்துப், பின் தலைவியைப் புலவிதீரச் செய்கின்றனள். அவள் உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.) அரிகால் மாறிய அங்கண் அகல்வயல் மறுகால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீைெடு பெயரும் யாணர் ஊர! நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று, தன் செய்வினப் பயனே! சான்றேர் செல்வம் என்பது, சேர்ந்தோர் புண்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வஞ் செல்வம்என் பதுவே! தெளிவுரை : தலைவனே! நெல் அறுத்து நீங்கப்பெற்ற தானஅழகிய இடமகன்ற வயலினிடத்தே, மீளவும் உழுத ஈரத்தையுடைய சேற்றிலே, விதைக்குழ் பொருட்டாக வித்தோடும் போயின உழவர், வட்டியினிடத்தே, பற்பல வகையான மீன்களோடும் திரும்பிக் கொண்டிருக்கின்ற, புதுவருவாயினைக் கொண்ட ஊரனே! எதனையும் பெரிதாக நெடுநேரம் பேசுதலாகிய பேச்சுவன்மையும், தேர் யானே குதிரை முதலாயவற்றை விரைவாக ஏறிச் செலுத்துத லாகிய உடல்வலிமையும் செல்வம்' என்று கொள்ளப்படுவ தன்று. அவை வாய்த்தல் முன் செய்த நல்வினைப் பயன லேயே யாகும் என்று அறிவாயாக. இனிச் சான்ருேர் "செல்வம்’ என்று சொல்வதுதான், தன்னை அடைக்க்ல மாகச் சேர்ந்தோரது துயரத்தை நினைத்து அச்சங்கொள்ளும் பண்பினைக் கொண்டாயாய், அவர்பால் இனிய தகையாள்ளு யிருந்து உதவும் பண்புச் செல்வமே செல்வம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/36&oldid=774484" இலிருந்து மீள்விக்கப்பட்டது