பக்கம்:நற்றிணை-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நற்றிணை தெளிவுரை கொள்க. தேரினை விரைந்து செலுத்துக என்று சொல்லா திருப்பினும், தலைவனின் ஏக்கத்தை உணர்பவன் விரையச் செலுத்துவான் என்பதாம். வானம் பெய்ல் தொடங்கியது காலத்தை நினைவுபடுத்தி, நம் வராமையை நினைப்பித்து ஏங்கச் செய்யும்; மாலைக்காலத்துக் கோவலர் குழலோசை அத்துயரை மேலும் ஊதிஊதி மிகுதியாகக் கனலச் செய்யும்; இதன்மேல், இரவில் எழும் இடிக்குரல் முழக்கத்திலே அவள் நிலைதான் யாதாகுமோ? என்று தலைவன் வருந்தியதாகக் கொள்க. பயன் : தலைவன் விரைவாகத் தன்னுரர் அடைந்து, மனை வியின் துயரைப் போக்கி மகிழச் செய்வான் என்பதாம். 372, விளக்கம் எண்ணும் மகளிர்! பாடியவர். உலோச்சனர். திணை : நெய்தல். துறை : மேல் இற்செறிப்பான் அறிந்து, ஆற்ருளாகி நின்ற தலைமகள் ஆற்றவேண்டி, உலகியலின்மேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறியாரெனச் செப்பியது. - (து - வி) களவு ஒழுக்கத்திலே ஈடுபட்டிருக்கும் தலைவிக்கு, தான் இற்செறிக்கப்படுதல் கூடும் என்ற அச்சம் ஏற்படுகின்றது. அதை நிணந்து நினைந்து கவலையும் அதிகமாகி வருத்துகின்றது. ஆவளத் தேற்ற நினைக்கும் தோழி, இது உலகத்தியல்பு நின்னை நம்மவர் இற்செறித்து வையார் என்று தேறுதல் கூறுகின்றதாக அமைந்த செய்யுள் இது.) அழிதக் கன்றே தோழி!-கழிசேர்பு கானல் பெண்ணைத் தேனுடை அழிபழம் வள்ளிதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு, அள்ளல் இருஞ்சேற்று ஆழப் பட்டெனக் கிளைக்குருகு இரியும் துறைவன் வளைக்கோட்டு 5 அன்ன வெண்மணற்று அகவயின் வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்தினிது நோக்கி அன்னை தந்த அலங்கல் வான்கோடு உலந்தாங்கு நோதல் அஞ்சி-அடைந்ததற்கு இனையல் என்னும் என்ப-மனையிருந்து 10 இருங்கழி துழவும் பணித்தலைப் பரதவர் திண்திமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழிகல் லுரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/360&oldid=774486" இலிருந்து மீள்விக்கப்பட்டது