பக்கம்:நற்றிணை-2.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 . .நற்றிணை தெளிவுரை விளக்கம் : கையிடத்துப் பாற்கலத்தைக் குரங்கு பறிக்க அழுது அழுது வயிற்றலடித்துப் புலம்பும் அறியாப் பருவத்தாள் என்று கூறுகின்றனள். அதுபோல அவள் நலனை நுகர்ந்து நீயும் அழுதரற்றச் செய்ய நினைத்தனை போலும் என்பதாம். ஏதிலார் அவளுக்கு வரைபொருளிந்து மணந்துபோக, நீ தான் மனந் தளர்ந்து வாட நேரிடும்; ஆகவே விரைய வரைவோடு வருக என்று குறிப்பால் உணர்த்தியதுமாம். பயன் : தலைமகன் தன் முயற்சியைக் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பவனவான் என்பதாம். 2வது துறையின் தெளிவுரை கொடிச்சியாகிய தோழியே என் மேனியிலேயுள்ள மாற்றம் பற்றி வருந்துவையோ? பாலைப் பறித்துப்போக அழுதலால் கண் அழகழிந்தன; கண்ணிரைத் துடைத்துத் துடைத்துக் கைவிரல்கள் நீலம்பெற்றன; வயிற்றி லடித்து வாடியதால் கைவிரல்கள் சிவந்து காந்தள் முகை போல ஆயின; நீ வேறு நினைந்து வருந்தாதே என்பதாம். பயன் : தன் துன்பம் வாய்விட்டுக் கூறுதலானே சிறிது ஆறுதல் அடைதல். 380. ஒத்தனெம் அல்லேம்! பாடியவர் ; கடலூர்ப் பல்கண்ணனர். திணை : மருதம். துறை : பாணற்குத் தோழி வாயில் மறுத்தது. (து - வி.) : பரத்தையிடமிருந்து பிரிந்து தலைவியை விரும்பியவகை வருகின்ருன் தலைவன். தலைவியோ ஊடியிருக் கின்ருள். அவளிடம் சமாதானம் பேசுவதற்குத் தலைவனிடம் பணி செய்யும் பாணன் செல்லுகின்றன். அவனிடம், தலைவி மறுத்து உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.) நெய்யும் குய்யும் ஆடி மையொடு மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வற் புல்லிப் புனிறு காறும்மே: வாலிழை மகளிர் சேரித் தோன்றும் 5 தேரோற்கு ஒத்தனம் அல்லேம்:அதனல் பொன்புரை நரம்பின் இன்குரல் சீறியாழ் எழாஅல் வல்ல ஆயினும், தொழாஅல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/376&oldid=774522" இலிருந்து மீள்விக்கப்பட்டது