பக்கம்:நற்றிணை-2.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 373 கொண்டுசெல் பாண!-கின் தண்துறை ஊரன பாடுமனப் பாடல்; கூடாது டுேகிலைப் 10 புரவியும் பூண்நிலை முனிகுவ, - விரகுஇல மொழியல், யாம் வேட்டதில் வழியே. தெளிவுரை : பாணனே! எம் ஆடையோ நெய்யும் நறும் புக்ையும் படிந்ததாய் கருமைநிறத்தோடு மாசுபட்டிருக்கின்றது. சுணங்குடைய மென்மையான கொங்கைகளின் இனிதான பாலானது சுரந்து பெருகும்படியாக எம் புதல்வனை அணைத்துக் கொள்வதாலே, எம் தோள்களும் ஈன்றதன் அணிமைக்குரிய பால் நாற்றம் உடைத்தாயிருக்கும். தூய அணிகளணிந்த பரத் தையரின் சேரியிடத்தே காணப்படும் தேரோகிைய நம் தலைவனுக்கு, அதனால் நாம் இயைந்தவர் ஆகமாட்டோம். அதனலே, பொன் போன்ற நரம்பினிடத்தே இனிய குரலை எழுப்புகின்ற சிறிய யாழை இசைத்துப் பாடுதலிலே நீ வல்ல வனே என்ருலும், இவ்விடத்தே எம்மைத் தொழுது நிற்றல் வேண்டா. சிறந்த எமதுமனையிடத்தே நின்று நீதான் பாடுதலைச் செய்யாதபடியாக, நெடும்பொழுதுக்கு நிற்றலையுடைய, தேரிற் பூட்டிய குதிரைகளும், வெறுத்துக் கனைக்கின்றன காணுய். யாம் விரும்பியது என்பது இல்லாதவிடத்துப் பயனில்லாத சொற் களைப் பேசவேண்டா. நின் தண்ணிய துறையுடைய ஊரனை அப் பரத்தையர் சேரிக்கே கொண்டுபோய் விடுப்பாயாக! அதனல், பொன்பெற்று நீயும் உவப்பாயாக என்பதாம். கருத்து : தலைவனை ஏற்க எம் மனம் இசையாது என்பதாம். சொற்பொருள் : நெய் - வாலாமை நீங்க ஆடும் நெய் அல்லது எண்ணெய். குய் - தாளிதப் புகை. ஆடி - ஒன்றன் மேல் ஒன்ருகப் படிந்து படிந்து. மையோடு-மைபோலக் கருமை யோடு. மாசு - அழுக்கு. கலிங்கம் - உடை, மென்பூங் கலிங்கம் எனலாம். திதலை - தேமற்புள்ளிகள். தீம்பால் - இனியபால். பிலிற்ற - பீச்சிட. புல்லி - அணைத்து. புனிறு - ஈன்றதன் அணி மையிலே உண்டாவது போன்றவொரு பால் மணம், வாலிழை - ஒளி செய்யும் அணிகள். மகளிர் - (இங்கே) பரத் தையர்: மனைவி அழுக்குப் படிந்த உடையும், புதல்வனை அணைத் துப் பால்நாறும் தோளும் உடையவளாக இருக்கப் பரத்தையர் ஒளி செய்யும் அணிகள் பூண்டு ஆடம்பரமாயிருப்பர் என்பதாம். சேரி - சேர்ந்திருக்கும் இடம். தேரோன் - தேருடைய தலைவன்; தலைவனது வளமை சுட்டியது. சீறியாழ்-சிறிய யாழ். எழாஅல் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/377&oldid=774523" இலிருந்து மீள்விக்கப்பட்டது