பக்கம்:நற்றிணை-2.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 நற்றிணை தெளிவுரை விளக்கம் : இதல்ை, பொருள் தேடி வருவதற்காக அவன் அவளைத் தனித்திருக்கவிட்டுப் பிரிந்து போகவேண்டிய தில்லை; அவன் போகமாட்டான். அதல்ை ஆற்றியிருப்பாயாக' என்று தேற்றியதாம். காரான் அகற்றிய தண்ணடை என்றது அதுதான் செழித்துப் பலவிடங்களிலும் இருந்ததனல், அது அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தின்று விட்டுப்போன தழை என்பதாம். இனி, கொடிகளை அது வேரொடும் அகற்றிய தல்ை தோன்றும் பொன்துகள்களைப் பெண்கள் கலன் செய்யக் கூட்டுவர் என்பதுமாம். திணை பாலையானதால், வளமான பொதும்பில் புள்ளிநிழல் உடைத்தாய்த் திரிந்தது எனவும்; காரான் புல்லைக் காணுது அங்கங்கே தோன்றிய கொடிகளைப் பற்றித் தின்ன, அதனல் சிதறிய பொற்றுகளை மகளிர் சேர்ப்பர் எனவும் கொள்வதும் பொருந்தலாம். நன்னன் ஏழில் நெடுவரைப் பாழி (அகம். 152) சூழியானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி (அகம் 15) என்று பிறரும் நன்னனின் நாட்டைப் பற்றிக் கூறுவர். பயன்: இதல்ை, தலைவி பிரிவைப் பாராட்டாது ஆற்றி யிருப்பாள் என்பதாம். பாடபேதம் : நன்னன் ஆய்நாட்டு ஏழிற்குன்றம். 392. கனி பேர் அன்பினர்! பாடியவர்: மதுரை மருதன் இளநாகனர். திணை: நெய்தல் துறை: (1) இரவுக்குறி முகம் புக்கது; வரைவுநீட ஆற்ருளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியது உம் ஆம். ({து . வி.) (1) பகற்குறி வாயாமற் போதலாலே, தலை வியைச் சந்திக்க முடியாமற் போன தலைவன், தோழியின் உதவி யோடு இரவுக்குறிச் சந்திப்பை விரும்புகின்ருன். அவளும் அதற்கு இசைந்தாளாகித் தலைவி இருக்குமிடம் செல்கின்ருள். ஆயம் சூழ அமர்ந்திருந்த அவளிடம் சொல்லால் எதுவும் கூறமுடியாமல், முகக்குறியால், அவள் மட்டுமே அறிந்து கொள்ளுமாறு செய்தியைத் தெரிவிக்கின்ருள். அவள் கூற்ருக அமைந்த செய்யுள் இது; (2) வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த காலத்தில் வாராத வேதனையாலே வருந்தி யிருந்த தலைவியிடம் வந்து, அவன் வருவது உறுதி எனத் தேறு தல் உரைக்கிருள் தோழி என்றும் கொள்ளலாம்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/400&oldid=774576" இலிருந்து மீள்விக்கப்பட்டது