பக்கம்:நற்றிணை-2.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 நற்றிணை தெளிவுரை பெற்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் செறிவுமிக்க தொடரை அருளிய சான்ருேர் இவரே. ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந் தனம்’ என்று தெளிவாக உணர்ந்து வாழ்ந்த பெரியோர் இவர் எனலாம். இச் செய்யுளும் பலப்பல உண்மைகளை வலியுறுத்திப் பேசும் செய்யுளாகவே அமைந்துள்ளது. - 'மரஞ்சா மருந்தும் கொள்ளார். உரஞ்சாஅச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் என்பவை பொன்ற்ை பொறித்துப் போற்றற்குரியன. கணியர் என்று செய்யுளும் தெளிவாகக் காட்டுகின்றது. கந்தரத்தனர் 238 உரோடகத்துக் கந்தரத்தனரினும், காவிரிப்பூம்பட்டினத் துக் கந்தரத்தரினுைம் வேருனவர் இவர். இவரைக் கருவூரினர் என்பார் சிலர். கந்தரத்தன்' என்பது சிவபிரான் பெயராக லாம். தலைமகள் பருவங் கண்டு அழிந்ததன் கூற்ருக அமைந்த செய்யுள் இதுவாகும். உரனெடு, கனியா, நெஞ்சத் தோர்க்கும் இனிய அல்ல நின் இடிநவில் குரலே எனப் ப்ருவ மழையைப் பழிக்கிருள் தலைவி. eിജി 217, 2.25.253.261.291:39, 30, 38, 33, 349, 369, 373, 376 a' வேள் பாரியின் நண்பரும், சங்கப் புலவருள் மிகவும் உயர்ந்து நின்முேருள் ஒருவரும் கபிலராவர். இவர் அந்தணுளர்; பாரியை நட்பாகக்கொண்டு போற்றிய பண்பினர். பாண்டிய நாட்டுத் திருவாதவூரிலே பிறந்தவர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றிப் பதிற்றுப்பத்துள் ஏழாம் பத்துப் பாடியவர். குறிஞ்சிக் கலி, குறிஞ்சிப் பாட்டு, ஐங்குறு நூற்றுள் குறிஞ்சி பற்றிய 100 செய்யுள் இவர் செய்த பெருநூல்களாம். இவர் செய்த சங்கப்பாடல்கள் 235 என்பார்கள். 'பொய்யா நாவிற் கபிலன்', 'அந்தணுளன் கபிலன் என அக்காலப் புலவர்களாலும் போற்றப் பெற்றவர். இந்நூற் பாடல்களுள் பல அரிய செய்திகளை இவர் வாக்காகக் காணலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/432&oldid=774646" இலிருந்து மீள்விக்கப்பட்டது