பக்கம்:நற்றிணை-2.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 நற்றிணை தெளிவுரை உண்மையிலே அருளினவன் அல்லைகாண்; வழியேதம் நினைத்து எம்மைத் துயரப்படவே வைத்தனை என்று தோழி சொல்வ தாக வருவது பெண்களின் சிறந்த மனநிலைக் காட்சியாகும். சித்தலச் சாத்தகு 339 _. இவர் வாணிக மரபினர். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் எனவும் வழங்கப்பெறுவர். சீத்தலை ஊர் எனவும், தமிழ்ப் பற்று மிகுதியால் புன் செய்யுட்களைக் கேட்கும்போது எழுத்தாணியால் தலையிற் குத்திக் குத்திப் புண்பட்டதால் வந்த பெயர் எனவும் உரைப்பர். மணிமேக செய்தவர்; இளங்கோ, செங்குட்டுவன் ஆகியோரின் நண்பர். சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனைப் பாடியவர் (புறம்.59.). அகத்தும் குறுந்தொகையினும் இவர் செய்யுட்கள் காணப் படும். தலைமகன் வரைந்து வராமையால் தலைவியும் தோழியும் கொள்ளும் வேதனை மிகுதியை, இருவேம் நீந்தும் பருவரல். வெள்ளம் என்று கூறியவர் இவர். • சேந்தன் பூதர்ை 261 இவர் இயற்பெயர் பூதனர் எனவும், சேந்தனரின் மகனராக இவர் இருக்கலாம் எனவும் கருதுவர். தோழி, காதலர் அருளிலர், பெருவரைச் சிறுநெறி வருதலானே என்று சொல் வதாக வரும் தொடர் மனத்தை உருக்குவதாகும். தங்கால் ஆத்திரேயன் செங்க்ண்ணனர் 386 இவர் மதுரையையடுத்ததிருத்தங்கால் என்னும் ஊரினர் ஆத்திரேயன் என்னும் சொல் கோத்திரத்தைக் குறிப்பதாகக் கொண்டு இவரைப் பார்ப்பன மரபினர் என்பர் சிலர். ஒளவை அவர்கள் ஆத்திரேயன் என்பது தவறு; ஆதிரையான் என்று கொள்வதே பொருந்தும் என்பார்கள். இவ்வாறு கொள்ளின் ஆதிரையானின் மகளுர் என்று அப்போது கொள்க. இது குறிஞ்சித்திணைச் செய்யுள். பன்றி ஏனல் கதிரைத் திருடித் தின்றுவிட்டு, வேங்கைக்கும் அஞ்சாது கழைவளர் சார்ல் துஞ்சும் நாடன்' என்பது களவில் இன்பந்துய்த்தும், அலருக் கஞ்சாது வாளாவிருக்கும் தலைவன நன்கு நினைப்பிப்பதாகும். தங்கால் பொற்கொல்லன் வெண்குகளுர் 313 இவரும் திருத்தங்கால் ஊரினர். பொற்கொல்லர்; வெண் ணுகன் என்னும் பெயரினர். இனிப் பொன்செய் கம்மியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/442&oldid=774667" இலிருந்து மீள்விக்கப்பட்டது