பக்கம்:நற்றிணை-2.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| பாடிய சான்றேர்கள் r 439 . கைவினபோல, வேங்கை நாஞ்று புதுப்பூத் தோன்றும் என்ற நயம்பற்றிப் பொற்கொல்லன் என்று குறித்தனர் என்றும் கருதலாம். தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆன நாம் கூஉம் தினையே’ என்று முற்றிய தினைப்பயிரை ஓவியப்படுத் துவர் இவர். இன்றைக்கும் இவ்வூர்ப் பகுதிகளில் தினை பயிரிடு வாரைக் காணலாம். ஆகவே, கண்டறிந்த உண்மைகளை இலக்கியப்படுத்திய சிறப்பினர் இவர் எனல்ாம். தாயங்கண்ணளுர் 219 எருக்காட்டுர்த் தாயங்கண்ணனர் என்பாரும் இவரும் வேருனவர் எனலாம். கண்ணனர் இயற்பெயர் எனவும், "தாயன் தந்தையார் பெயர் எனவும் கொள்ளலாம். ஈசனைத் "தாயுமானவன்' என்பது மரபு: அக் கருத்தே 'தாயன்' என்னும் பெயருக்கும் தோற்றமாகலாம். 'தாயம் உரிமை எனக் கொள்ளின், அரசால் உரிமையாக நிலமோ யாதோ வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றவர் எனலாம். நெய்தல் திண்ைச் செய்யுள் இது. ‘பரதவர் படகுகளில் வைத்துள்ள விளக்குச் சுடர்கள் முதிரா ஞாயிற்று எதிரொடு கடுக்கும் என்ற உவமையால், இவர் கடற்கரை நாட்டவர் எனவும் கொள்ளலாம். தும்பிசேர் கீரனர் 277 'அம்ம வாழியோ, அணிச் சிறைத் தும்பி எனக் குறுந் , தொகையுள் (392) பாடிய நயத்தால் தும்பிசேர் கீரனர் என்ப் பெற்றனர் என்பர். தும்பி சொகினனர் எனவும் சிலர் கருதுவர். பாலைத்திணை சார்ந்த இந்தச் செய்யுளையும் கொடியை, வாழி தும்பி என்றே தொடங்குகின்ருர். மெய்யோ கருமை அன்றி. யும், செல்வன் அறிவும் கரிதோ அறனிலோய் என்று கேட்பது மறக்க முடியாத வாசகமாகும். தும்பிவிடு துதில் மிகவும் நயமுள்ள படித்துச் சிந்தித்து இன்புறவேண்டிய செய்யுள் இதுவாகும். துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனர் 263 கொற்றனர் இவர் பெயர்; சிறந்த வில்லாண்மை உடைய வர் என்பதால் மாவிற்பால’ என்ற அடை பெற்றனர்: 'துறைக்கு உறும் என்பது இவரது காவற்ருெழிலின் செவ்வி யைக் குறிப்பதாகலாம். போர்த்துறையில் பணியாற்றியவர் என்பது பொதுவான கருத்து. "விம்மி விம்மி நொந்து நொந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/443&oldid=774669" இலிருந்து மீள்விக்கப்பட்டது