பக்கம்:நற்றிணை-2.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 நற்றிணை தெளிவுரை உருக்கம் மிக்கதாகும். அகம் 296 ஆம் செய்யுளுள் இவர் நெடுஞ்செழியனைச் குறித்துள்ளனராதலின், அக்காலத்தவர் எனலாம். வீடுதிரும்பிய படைத்தலைவனை அவன் மனைவி வரவேற்று இன்புறும் நயத்தைத் தோழி நயமாக, “அரும்படர் அகல நீக்கி, விருந்தயர் விருப்பினள் என்று சொல்வதை, இச் செய்யுளிற் காட்டுகின்றனர். இவர். மதுரை மருதங்கிழார் மகளுர் சொகுத்தனர் 329 மருதங்கிழார் மகளுர் இவர்; சொகுத்தனர். இவர் பெயர் என்பது விளங்கும். இச் செய்யுள் பழந்தமிழரின் தத்துவச் சிந்தனைகளை உணர்த்துகின்ற சிறப்பினது. வரையா நயவினர்; நிரையம் பேணுர் என்று ஆறலைப்போரை இவர் குறிப்பிடு கின்ருர். கணையில் பருந்துச் சிறகைச் செறித்துக் கொள்ளும் வேட்டுவர் மரபையும் இவர் கூறுகின்றனர். மதுரை மருதங்கிழார் மகளுர் பெருங்கண்ணஞர் 388 இவரும் மருதங்கிழாரின் மற்ருெரு மகளுர் ஆவர். பெருங்கண்ணனர் என்னும் பெயரினர். நெய்தல் திணைச் செய்யுளான இது, இரவிலே கடல்மேற் சென்று எறி உளியால் மீன் வேட்டையாடும் வழக்கத்தையும், வேட்டமாடியவர் வைகறையில் கரையேறிப் புன்னை மரத்து நிழலில் அமர்ந்து கூட்டமாகக் கள்ளுண்டு மகிழும் இயல்பையும் காட்டுகின்றது. "பெரிய மகிழும் துறைவன், எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே' என்று தலைவன் சொல்வது, பெண்மைச் சால்பினைக் காட்டுவதாகும். மதுரை மருதன் இளநாகனர் 216, 233, 290, 302, 326, 341, 362, 392 தொகை நூற்களுள் 79 செய்யுட்கள் இவர் பெயராற் காணப்படும். வரலாற்றுச் செய்திகளைத் தம் செய்யுட்களில் அமைத்துப் புாடும் இயல்பினர் இவர். மருதக்கலியின் 35 செய்யுட்களும் பாடியவர் இவரே. பாண்டியன் கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பாடியவர். 'எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனி என முருகவேளைக் குறித்துள்ளனர் 216; ஏதிலாளன் கவலை சுவற்ற ஒரு முலையறுத்த திருமாவுண்ணி என்று இவர் உரைக்கும் \

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/454&oldid=774694" இலிருந்து மீள்விக்கப்பட்டது