பக்கம்:நற்றிணை-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_த்"ை ....\'ാണ് 64 $én ( நற்றிணை தெளிவுரை தொப்பில் என்பது, கொடிபோல மணச்சாந்தால் வரைவது; அதனை விரித்தல்' என்றும் கூறுவதுண்டு. இது பற்றியே அதலைமையும் வனப்பை வரிவனப்பு என்றன்ர். பசந்தெழு பருவரல் கூறியது தன்வயின் உரிமை கூறியதாம்; நயந்தோர்க்கு உதவாமை சொன்னது, அவன்வயிற் பரத்தைமை சுட்டியதாம் என்று அறிதல் வேண்டும். 226. மரஞ்சாக மருந்து கொள்ளார்! பாடியவர் : கணியன் பூங்குன்ருர், கணிபுன் குன்றனர் என்னும் பாடம். திணை : பாலை. துறை : பிரிவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எ ரெழிந்தது. | (து-வி.) தலைமகனது பிரிவிடையே மெலிந்தாளாகிய தலைவியிடம் சென்று, இன்னுஞ் சிறிது காலம் வலிதிற் பொறையோடு இருப்பாயாக’ என்கின்ருள் தோழி. அவளுக்குத் தன் வருத்தமிகு தியானது தோன்றத் தலைவி கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உாஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப் பொன்னுங் கொள்ளார் மன்னர் கன்னுதல்! காந்தம் உண்மையின் உளமே; அதனல், தாஞ்செய் பொருளளவு அறியார் தாங்கசிந்து 5 என்றுழ் நிறுப்ப நீளிடை ஒழியச் சென்ருேர் மன்ற, தங்காதலர்! என்றும் இன்ன நிலைமைத் தென்ப - என்ைேரும் அறிய இவ் உலகத் தானே! தெளிவுரை: அழகிய நுதலை உடையவளே! இவ்வுலகத் திலேயுள்ள மாந்தர்கள், மரம் பட்டுப் போகுமாறு, அதனிடத்தே உளதான மருந்துக்காகும் பகுதிகளை எல்லாம் முற்றவும் எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள்: உயர்வான தவத்தைக்செய்வாருங் கூடத், தம்முடைய உடலது வலிமை யானது முற்றவும் கெட்டுப்போகும் எல்லைக்கண்ணும் தொடர்ந்து அத் தவத்தைச் செய்ய மாட்டார்கள். தம் நாட்டுக குடி மக்களின் வளமெல்லாம்.முழுவதும் கெட்டு போகும் வண்ணம், அவரிடமுள்ள பொன்ன எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/70&oldid=774760" இலிருந்து மீள்விக்கப்பட்டது