பக்கம்:நற்றிணை-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 83 தெளிவுரை : "தோழி! நீ, வாழ்வாயாக! என்பால் உண் டாகியதான இக் காமநோயும் அளவு கடப்பப் பெரிதா கின்றது. என் உடம்பும் தீயை உமிழ்கின்ருற் போலக் காமநோய் தாக்குதலினலே வெப்பத்தை உடையதாய் இராநின்றது. ஆதலினலே, குற்றமில்லாத ஒண்ணிய நேர்மை கொண்ட என் ஒளி வளைகளை நெகிழச் செய்தோன் அவன்; அவன் குன்றத்தைச் சார்ந்த, பெருமை பொருந்திய நெடிய மலைப்பக்கங்களிலே ஊடாடியதாகத் தண்ணென்று, அகன்ற நம் குன்றத்துப் பாறையிடத்தேயும் வந்து நிரம்பியுள்ள காற்ருனது, என் பசலைபடர்ந்த மார்பிடத்தே சிறிது தீண்டுதலையேனும் யான் விரும்புகின்றேன். அது குறித்து, நீதான் விரையச் சென்று, நரகம்போலக் கொடுமை நிரம்பிய நெஞ்சத்தையுடைய நம் அன்னைக்கு, "உயர்ந்த நம்முடைய முன்றிலிலே இவளைச் சிறிதுபோது கொண்டு சென்ருல், இவள் தன் நோய் பெரிதும் நீங்கப் பெறுவாள்' என்று உரைத்து, அவள் இசைவைப் பெற்று வருவாயாக" என்பதாம். - சொற்பொருள் : நோய் - காமநோய். கைம்மிக - அளவு கடப்ப; பிறர் அறியாவாறு மறைக்கின்ற தன்மையையும் கடந்து பெருகிய நோய் என்க. தீயுமிழ் தெறலின் - தீயை உமிழ்ந்தாற்போல வருத்துதலினல்; இது நோயின் கொடுமை எனக் கூறுக; இனி இரவுக்குறிச் சிறைப்புற்மாகக் கொள்ளின் நிலவொளியைக் குறித்ததாகக் கொள் க. ஒய்யென - விரைவாக. முன்றில் - முற்றம்; இல்லத்தின் முன்பாக விளங்கும் காலியிடம். நிரையம் - நரகம். புரை - குற்றம். ஏர் - அழகு. எல் - ஒளி. அண்ணல் - பெருமை யுடைய. வியல் - அகன்ற. அறை - பாறை . விளக்கம் : தன் காதலை உணராதே, தன்னை இல்வயிற் செறித்துக் காவலும் ஏற்படுத்தியதல்ை, நிரையம் போன்ற நெஞ்சத்து அன்னை' என்று இகழ்ந்தனள். அவள்தானும் தன்போற் பெண்ணுயினும், தானும் கன்னிப் பருவத்தே இத்தகைய காதல் உறவினளேனும், இப்போது தன்னைத் தடைசெய்ய முனைகின்ற கொடுமையால் மனம் வெதும்பி இவ்வாறு அன்னையைப் பழிக்கின்றனள். பெண்மையின் கற்பறத்துக்கு ஊறு விளைத்தலினலே, நரகம் புகுவள் என இவ்வாறு கசந்து கூறிளுைம் ஆம், புரையில் நுண் ஏர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/85&oldid=774776" இலிருந்து மீள்விக்கப்பட்டது