பக்கம்:நற்றிணை-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - . 89 அவனிட்ட தொழில்களைக் கேட்டுச் செய்து வந்தேமும் இல்லை. அங்ங்னமாகவும், முன்னங் கையிடத்தேயுள்ள நெடிய கோற்ருெழில் அமைந்த ஒளிகொண்ட வளைகள் உடையும்படியாக, அவனை வளைத்து அணைத்தனையாய்த் தழுவுவாயாக’ என்று கூறிக் கலங்கியழுகின்ற இவ்வூர வர் தாம், யாம் அவனுக்கு அமைய நடக்கவல்லதான போக்கு உடன்படுதலாகிய ஒன்றையும் செய்தனமாயின், என்ன பாடுபடுவரோ? அதனை யானும் அறியேனே! என்பதாம். சொற்பொருள் : ஞான்ற ஞாயிறு - சாய்ந்து டோகின்ற ஞாயிருனது. குடமலை . மேலைத் திசைக்கண் உள்ள மலை. மான்ற மாலை - மயக்கந்தருகின்ற மாலை. மாறி - விலைமாறி. முன்றில் - முற்றம். காமர் சிறுகுடி - காண்பவர் விரும்பும் அழகிய சிறிய குடியிருப்பு. பூத்தப - பூக்கள் அழிய. வார்கோல் எல்வளை - நெடிய கோற்ருெழிலையுடைய ஒளியுள்ள வளையல்கள். வாங்கி - வளைத்து. முயங்கு - தழு வாயாக. கலுழ்ந்த கலங்கிப் புலம்பிய. - விளக்கம் : இனிது பெறு பெருமீனப் பரதவர் தம் கள்ளுண்ட மயக்கத்தாலே எளிய விலைக்கு மாறிவிட்டனர் என்று அறிக. வலிதே பெற்ற மீளுயின் அவ்வாறு விற்பா ரல்லர் என்பதும் விளங்கும். 'இல்லறம் கொண்டு தலைவற்குத் தொண்டு செய்யும் பயனைப் பெற்றேமில்லையே' என்று வருந்துவாள், தொழில் கேட்டன்ருே இலமே என்றனள். அவைேடு கூட்டம் உண்மையை ஊரவர் அறிந்தனர் என்பாள், வாங்கி முயங்கு என இவ்வூர்_கலுழ்ந்தது’ என்றனள். இதல்ை, இனி இறந்து படுதலேயன்றி வேறு வழி யாதும் காணுேம் என்று புலம்புவாள், அதல்ை அவனுக்குப் பழி எய்தும் எனவும் கவலையுறுகின்றனள், உள்ளுறை :‘இனிதிற் பெற்ற பெருமீனை எளிதில் மாறிக் குடித்து மயங்கினரான பரதவர், நெறியிலுள்ள நீலமலரை மிதித்தவாறு வீடு நோக்கிச் செல்வர் என்றனள். இவ் வாறே காம மயக்கங் கொண்டானகிய காதலனும் அரிய பொருளைத் தமரிடத்துக் கொடுத்துத் தலைவியைப் பெற்று மணந்து, ஊரார் எடுத்துரைத்த அலரினைத் தாழ மிதித்து அடக்கித் தன்னுர்க்கு அவளைக் கொண்டு செல்வாகுைக என்றதாம். - இதனைக் கேட்டலுறும் தபேவனும், விரைவில் வரைந்து வகுதலேயே கருதுவானுவன் என்பதாம், - рд),—6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/91&oldid=774783" இலிருந்து மீள்விக்கப்பட்டது